சைவ சமயத்தில் பக்தி இலக்கியங்களாகப்
போற்றப்பட்டவை திருமந்திரம், திருவாசகம், திருப்புகழ். அதன் பிறகு
எழுதப்பட்ட பாடல்கள் யாவும் பிரபந்த திரட்டுகள் எனவும், பின் இயற்றப்பட்டப்
பாடல்கள் வெறும் திரட்டு எனவுமே அழைக்கப்பட்டன.
கோயில்களில், பசனைகளில், உற்சவங்களில்
இப்பாடல்கள் மட்டுமே மிகுந்த சிரத்தையோடு பாடப்பட்டன. இந்தச் சூழ்நிலையில்
1867 ஆம் ஆண்டு வள்ளலார் அவர்கள் இயற்றிய பாடல்கள் அருட்பா எனும் தலைப்பில்
வெளிவந்தது.
ஆரம்பத்தில் சொற்பொழிவுகளுக்கு முன்னர்
பாடப்பட்ட அருட்பா மக்களிடம் வரவேற்பு பெற்றபோது கோயில்களில் பன்னிரண்டு
திருமுறைகளோடு பாடப்பெறும் அளவுக்கு உயர்ந்தது. இது பலருக்கு வெறுப்பினைத்
தந்தது. ஏனெனில் இராமலிங்க அடிகளின் பாடல்கள் அனைத்தும் தேவை இல்லாத சமயக்
கோட்பாடுகளை கேள்வி கேட்டது. சாதிய வேறுபாடுகளை களைய அவர் இயற்றியப்
பாடல்கள் பலரின் கவனத்தைப் பெற, சாதி மதங்களில் ஊறிய மனங்கள் அதை
எதிர்த்தன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment