கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகத்திலுள்ள
தனியார் பள்ளி நிறுவனங்கள், இந்த பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு
பொதுத்தேர்வு சமயத்தில், சில குறிப்பிட்ட மதத் தொடர்பான மூடநம்பிக்கைகளை
மாணவர்களிடம் திணிக்கிறது என்றே சொல்லலாம். இது ஒரு ஆபத்தான செயலாகும். நம்
வருங்கால சமூகம் இம்மாணவர்களையே நம்பியிருக்கும் நடைமுறையில், இம்மாதிரி
சமூக சீர்கேடுகளை நாம் உடனே தடுத்து நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறோம்.
பல தனியார் கல்வி நிறுவனங்கள் இந்தப்
பொதுத் தேர்வு சமயத்தில், பெற்றோர்களுக்கு பாதபூசை செய்ய நிர்பந்திக்கிறது,
மென்மேலும், ஆசிரியர்களும் பாதப்பூசை செய்ய வேண்டும், கல்வி கொடுக்கும்
ஆசிரியர்கள் தெய்வத்திற்குச் சமம் என்ற ஒரு தோற்றத்தை மாணவர்களிடம்
அறிமுகம் செய்கிறது. இதற்கெல்லாம் மிகப்பெரிய உச்சகட்டமாய், சமீபத்தில்
நடந்த ஒரு சம்பவம்தான் நம் எல்லோரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி
விட்டது எனலாம். சில நாட்களுக்கு முன், கோவை மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி
ஒன்று, பத்தாம் வகுப்பில் படிக்கும் நாற்பத்தியெட்டு மாணவர்களை மொட்டை
அடிக்கச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறது. இதற்கு ஆசிரியர்களும் ஒரு
காரணமாம். தேர்வில், தேர்ச்சிப்பெற வேண்டுமென்பதால் தான் இந்த மொட்டை
அடிக்கும் சம்பவமாம்.!
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment