சுற்றிலும் தினம் தோறும் நிகழும்
நிகழ்வுகளில் பெரும்பான்மையினரின் கவனத்தைப் பெறும் நிகழ்வுகள்,
நிகழ்வுகளின் உச்சங்களா அல்லது வெறும் அபத்தங்களா? ஒருவித மனநிலையில்
இருக்கும்போது உச்சங்களாகத் தோன்றும் அதே நிகழ்வுகள் இன்னொரு மனநிலையில்
அபத்தங்களாகத் தோன்றுகிறது. இதில் எது காட்சிப் பிழை? அல்லது இரண்டுமே
காட்சிப் பிழைகளா? எனில் உண்மைதான் என்ன? உண்மையை அறிய முடியுமா?
சமூகத்தின் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு,
அவர்கள் வெறுமனே உணர்ச்சிவசப்பட வைக்கப்படுகிறார்கள். சிந்தனையின்
அடிப்படையின்றி உணர்ச்சிவசப்பட வைக்கப்பட்ட சமூக மக்கள், அவர்கள்
கண்ணுக்குத் தெரியாத ஆனால் அடிப்படையில் அவர்கள் யாரை எதிர்க்க
விரும்புகிறார்களோ அவர்களுக்கு சாதகமான வழிகளில் உணர்ச்சிகளை
வெளிப்படுத்துகிறார்கள். உணர்ச்சிவசப்பட வைத்த சமூக விரோதிகள், லாபத்தை
அள்ளிச் செல்கிறார்கள். சமூகம் அடுத்த உணர்சிவசப்படுதலுக்கு தயாராக நின்று
கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment