சிறகு இதழுடன் தங்களுக்குத் தொடர்பு எவ்விதம் ஏற்பட்டது?
2012ஆம் ஆண்டு. எனது மாணவரும் நண்பருமான திரு. காசிவிசுவநாதன், இந்த இதழ் பற்றியும் இதில் நான் எழுதவேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர்தான் திரு. சௌமியன், ஷாஹுல் ஹமீது, தில்லைக்குமரன் ஆகியோரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போதே எனது மொழிபெயர்ப்புப் பணிகளைப் பற்றி ஒரு நேர்காணலை என்னிடம் நிகழ்த்த சிறகு இதழ்க் குழுவினர் வந்தனர். ஆனால் எக்காரணத்தாலோ அதன் ஒளிப்படம் சரிவர வராததால் என் நேர்காணலை ஒலிப்பதிவு செய்து அதைச் சிறகு இதழில் வெளியிட்டனர். அப்போது முதல் எனது பல்வேறு பணிகளுக்கிடையில் அவ்வப்போது சிறகு இதழில் எழுதிவருகிறேன்.
தங்களுக்கு கிடைத்த மொழிபெயர்ப்பு விருதுகளின் பின்னணி என்ன?
பின்னணி என்றால் எனக்குப் புரியவில்லை.
வேண்டியவர்கள், பரிந்துரையாளர்கள் இவர்களை இச்சொல் குறிக்கிறது என்றால்
அப்படி எனக்கு யாரும் இல்லை. அம்மாதிரி யாரேனும் எனக்கு இருந்திருந்தால்
குறைந்தபட்சம் பத்தாண்டுகள் முன்னரே இம்மாதிரிப் பரிசுகள் எனக்குக்
கிடைத்திருக்கக்கூடும். என்னைப் பொறுத்தவரை, நான் யாரைப் பற்றியும்
கவலைப்படுவதோ, முன்னேற்றுவதற்காக வேண்டி யாருடனும் தொடர்பு கொள்வதோ
கிடையாது. நான் உண்டு, என் எழுத்தும், மொழிபெயர்ப்பும் உண்டு – ‘கருமமே
கண்ணாயினார்’. அவ்வளவுதான்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment