பேருந்து, அண்ணாசாலை வழியே சென்று
கொண்டிருந்தது. சாலையில் சில பள்ளி மாணவிகள் சிரித்துக்கொண்டும்,
பேசிக்கொண்டும் செல்கின்றனர். ஒரு வயதான தாத்தா பேரனை பள்ளிக்கு
அழைத்துக்கொண்டு போகிறார். இளவயது தாய் ஒருவர் தோளில் ஒரு பையுடன், தன்
குழந்தையை தூக்கியபடி வேகமாக நடந்து கொண்டிருக்கிறார். எங்கோ மெலிதாக,
‘நான் தேடும் செவ்வந்திபூவிது’ என்ற இளையராஜாவின் மெலடி பாடல் கேட்கிறது…
இவைகளை எல்லாம் கடந்து, பேருந்து சென்று கொண்டிருக்கிறது. இத்தனையும்
தாண்டி, தனக்கு பிடித்த சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாலும்,
பூங்குழலிக்கு மனம் சாலையில் லயிக்கவில்லை. கண்களில் கண்ணீர் வருவதற்குத்
தயாராக உள்ளது… காலையில் வீட்டில் நடந்த சம்பவமே மீண்டும், மீண்டும் மனதில்
வந்து தொல்லைப்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாக அவளுடைய நினைவலைகள்
பின்னோக்கிச் செல்கின்றன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment