மனிதனின் உடலை வளப்படுத்துவது விளையாட்டு.
மனித மனதை மகிழ்ச்சி அடையச் செய்வதும் அதுவே. மனித வாழ்வில் ஏற்படும்
வெற்றித் தோல்விகளைச் சரிசமமாக ஏற்க வைப்பதும் விளையாட்டு அனுபவமே ஆகும்.
‘‘செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே” என்று
விளையாட்டால் உவகை தோன்றும் என்கிறார் தொல்காப்பியர்.
சங்க இலக்கியங்களிலும், தொடர்ந்து எழுந்த
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும், காப்பியங்களிலும் பல்வகை விளையாட்டுகள்
குறித்த பதிவுகள் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன. தமிழர்தம் மரபு சார்ந்த
அடையாளங்களுள், பழக்கவழக்கங்களுள் ஒன்றாக நீடித்து இருப்பது விளையாட்டுத்
துறை ஆகும். செவ்விலக்கிய கால விளையாட்டுகள் இன்றைக்கு வரை தமிழர்களின்
புழங்குமுறையில் இருப்பது என்பது விளையாட்டு உணர்ச்சியின் தொடர்வையும்,
செவ்விலக்கிய கால நீட்சியையும் அறிவிப்பதாக உள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment