எட்டுத்தொகை நூல்களுள் செறிவும்,
இனிமையும் மிக்கது குறுந்தொகை ஆகும். ‘‘புறத்தே தோன்றும் காட்சிகளைச்
செய்யுட்களில் புனைந்து காட்டும் ஆற்றலினும் அகத்தே தோன்றும் கருத்துக்களை
உணர்ச்சியும், மெய்ப்பாடும் புலப்பட உரைக்கும் ஆற்றல் சிறந்தது” என்று
குறுந்தொகையின் சிறப்பினை எடுத்துரைக்கிறார் உ.வே. சாமிநாதர். அகமனப்
புரிதல்களுக்கு இடமளிக்கும் பாடல்கள் பலவற்றைக் கொண்டது குறுந்தொகையாகும்.
இக்குறுந்தொகையில் இருபத்தோரு பெண்பாற் புலவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் எழுதிய குறுந்தொகைப்பாடல்கள் மொத்தம் எழுபத்தைந்து என்ற அளவினை
எட்டுகிறது. இப்பாடல்களைப் பெண்ணிய நோக்கில் அணுகுவதாக இக்கட்டுரை
அமைகிறது.
குறுந்தொகை அகம் சார்ந்த பாடல்களின் தொகுப்பாகும். இவ்வகப்பாடல்களில்
செவ்விய நிலையில் காதல் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. செவ்விய நிலைக் காதல்
என்பது ஒருவகையில் பெண்களுக்கு தடைப்படுத்தும் நிலையையும் தருகின்றது.
மற்றொரு வகையில் அதுவே விடுதலையையும் தருவதாக உள்ளது. பெண்கள் தாங்களாகவே
காதல் இன்பத்தில் ஈடுபடுதல், அல்லது ஆடவரால் வீழ்த்தப்படுதல் என்ற
நிலைகளில் திருமணம் என்ற எல்லைக்குச் சென்று குடும்பம், பிள்ளை, இல்லறம்
என்ற பிணைப்பு நிலைக்கு ஆளாகின்றனர். அதே நேரத்தில் காதலித்ததன் காரணமாக
சிலவகை உரிமைகளையும் பெண்கள் பெறத் தகுதி உடையவர்களாக உள்ளனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=26500
No comments:
Post a Comment