Wednesday, 31 May 2017

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் !!


Siragu pirappokkum1

வள்ளுவன் இயற்றிய உலகப் பொதுமறையில் பெருமை என்ற அதிகாரத்தின் 2 வது குறள் -
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” !!
பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்கு உரக்க உரைத்திற்று.


ஆனால் பிறப்பில் பேதம் கற்பிக்கும் சாதி தமிழ்ச் சமூகத்தில் நுழைந்து நம்மை பிளவுபடுத்தியது. சாதி என்பது ஏற்றத்தாழ்வுகள் கொண்ட ஒரு சமூக அவலம், அது ஒரு உரிமை மீறல், பாகுபடுத்தி நடத்துதல், ஒரு வன்முறை என்பதை பலரும் உணரவேயில்லை. சாதிய படிநிலையில் மேல் சாதி உயர்ந்த சமூக நிலையும், கீழ் சாதி தாழ்ந்த சமூக நிலையும் கொண்டவர்களாக கருதப்படுகின்றார்கள். இந்நிலையான வேறுபாட்டை நிலைநாட்டும் வண்ணம் பல்வேறு சமூக மரபுகளும் சடங்குகளும் அம்மக்களை முட்டாளாக்கி வைத்திருக்கின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 30 May 2017

தமிழ் தொழில்முனைவோர் மாநாடு 2017


Siragu Tefcon flyer1



அமெரிக்காவிலுள்ள ஏராளமான தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்த் திகழ்வது, வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையாகும். வட அமெரிக்காவிலிருக்கிற ஏதோவொரு நகரில் அந்தப் பகுதி தமிழ்ச்சங்கத்தோடிணைந்து, ஆண்டுதோறும் அமெரிக்கத் தமிழர் விழாவாகத் தன் ஆண்டுவிழாவினைக் கொண்டாடிவருகிறது பேரவை. அதன் தொடர்ச்சியாக, மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் பேரவையுமிணைந்து இவ்வாண்டுக்கான விழாவினை எதிர்வரும் ஜூலை 1, 2 ஆகிய நாட்களில் மினியா பொலிசு நகரில் நடத்தவிருக்கிறது. இத்திருவிழாவின் ஒரு அங்கமாக இடம்பெறுவதுதான் அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் மாநாடு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தோல்!(கவிதை)


Siragu parai1

இறந்த பின்னும்
உழைப்பின் பெருமையை பறைசாற்றுகிறது
இந்த உலகிற்கு
உழைக்கும் வர்க்கப் போராட்டதினரின்
பேரொலி யெழுப்பும்
ஆயுதமாக
பண்பாட்டுப் படையல்களில்
காதுகளுக்கு இசையாக



நவநாகரீக கோலத்தினரின்
அடிகளுக்கு அணியாக

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Friday, 26 May 2017

சிவப்பிரகாசரின் நன்னெறியில் திருக்குறள் ஆளுமை


Siragu sivaprakaasar

துறைமங்கலம் சிவப்பிரகாசர் சிறந்த பக்தியாளர். கற்பனைக் களஞ்சியம் என்று புகழப்படுபவர். முருகன் மீதும் தன் குருவான சிவஞான பாலய சுவாமிகள் மீதும் பல பனுவல்களைப் பாடியவர். இவரின் பாடல்களில் கற்பனை வளம் மிகுந்து காணப்படும். இவர் பாடியனவாகத் தற்போது முப்பத்து நான்கு நூல்கள் கிடைக்கின்றன. புராணங்கள், சிற்றிலக்கியங்கள் பாடுவதில் வல்லவரான இவர் பாடிய நீதி நூல் நன்னெறி என்பதாகும். நாற்பது பாடல்களை உடைய இந்நூல் ஒவ்வொரு பாடலிலும் ஒரு நற்கருத்தை விளக்குகிறது. அதற்கு ஏற்ற உவமையைக் காட்டி மேலும் பொருள் விளக்கம் செய்கிறது. நாற்பது பாடல்கள், நாற்பது உவமைகள், நாற்பது கருத்துகள் என்ற நிலையில் படைக்கப்பெற்ற நூல் நன்னெறியாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 23 May 2017

மாதவிடாய் பெண்களை வலிமை அற்றவர்களாக மாற்றுகின்றதா ?


Siragu Menopause3

மாதவிடாய் பற்றி இன்றும் பலர் தவறான பழக்க வழக்கங்களைக் கொண்டு, பெண் உடலின் இயற்கை நிலைகளைப் பற்றி அறியாது செயல்படுகின்றனர். முதலில் மாதவிடாய் என்றால் என்ன? என்பதை அறிவியல் விளக்கத்தோடு புரிந்து கொள்ளுதல் அவசியம். ஒரு பருவம் அடைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றம். இது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள ஒரு உறுப்புகளில் ஒன்றான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3-7 நாட்கள் குருதியுடன் சேர்ந்து கருப்பையின் உள் சீதமென்சவ்வும் வெளியேறுவதை குறிக்கும். இவ்வளவு தான் மாதவிடாய்க்கான அறிவியல் விளக்கம்.

ஆனால் நம் நாட்டில் மாதவிடாயின் போது பெண்கள் படும் பாடு இருக்கின்றதே? பண்பாடு எனும் பெயரில், மதத்தின் பெயரில் மாதவிடாய் என்றாலே மிகப் பெரிய அசுத்தம் என்பது போன்று இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 22 May 2017

பறிக்கப்படுகிறதா … மாநில சுயாட்சி


Siragu-state-govt1

தற்போது நிலவும் தமிழக அரசியல் சூழல் மிகவும் வருத்தப்படக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நம் மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொன்றும் புதிராகவே காணப்படுகின்றன. ஆளும் மாநில கட்சி அதிமுக-வை பலகீனமடையச் செய்து, இரு முக்கிய குழுக்களாகவும், மற்றும் சில சிறிய குழுக்களாகவும் பிரித்து, அக்கட்சியைத் தன வசம் வைத்துக்கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு.

இந்தியாவிற்கே, ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்று முழங்கி, புரிய வைத்தவர்கள் தமிழக மக்கள் மற்றும் அப்போதைய அரசியல் தலைவர்கள். ஆனால், அப்பேற்பட்ட தமிழகத்திற்கு இன்று ஏற்பட்டிருக்கும் நிலைமை என்னவோ பொம்மலாட்ட அரசு தான். நம் மாநில ஆட்சியின் கயிறு மத்திய அரசிடம் முழுவதுமாக போய் விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நம் ஆட்சியாளர்கள் கைப்பாவைகளாக மாறி விட்டிருக்கின்றனர் என்பது வேதனைக்குரிய ஒன்று. கண்டனத்துக்குரிய ஒன்று. 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 21 May 2017

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை 30ஆவது ஆண்டுவிழா


Siragu Peravai Vizhan Flyer

வட அமெரிக்காவில் ஆங்காங்கேயிருக்கிற தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்க் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கிவரும் அமைப்புதான், வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை என்பதாகும். ஆண்டுதோறும் அதன் ஆண்டு விழாவினை, வடஅமெரிக்காவிலிருக்கிற ஏதோவொரு நகரில் அமெரிக்கத் தமிழர், திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். அதன்படி 2017ஆம்ஆண்டுக்கான விழாவினை, எதிர்வரும் ஜூலை முதலாம் நாள் துவங்கி நான்காம் நாள் வரையிலும் மின்னசோட்டா மாகாணத்திலிருக்கிற மினியா போலிசு செயிண்ட்பால் இரட்டைநகர்ப் பகுதியில், மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும், தமிழ்ச்சங்கப் பேரவையுமிணைந்து நடத்துகின்றன.


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் ஒவ்வொரு ஆண்டு விழாவும், தமிழ்இலக்கியம், பண்பாடு, சமூகத்திற்குப் பணியாற்றிய ஆன்றோர் நினைவாக இடம்பெறுவது மரபாகும். அந்த மரபுக்கொப்ப, இந்த ஆண்டுக்கான விழாவானது நாடகக்கலையின் தலைமையாசிரியரான சங்கரதாசு சுவாமிகளின் நூற்றைம்பதாவது பிறந்தநாள் விழாவாகக் கொண்டாடப்படுவதோடு மட்டுமல்லாமல், ‘தமிழர் கலையைப் போற்றிடுவோம்! தமிழர் மரபினைக் மீட்டெடுப்போம்!!’ என்கிற முகப்பு மொழிக்கொப்ப நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றனயென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 18 May 2017

ஞானம் பெற்றேன் குருவே…!(சிறுகதை)


Siragu guru

நீண்ட குருகுல வாசம் முடிந்து ஒரு சீடன் வெளியேறிச் செல்லும் நாள் வந்தது. ஆசிபெறுவதற்காக அவன் குருவின் முன்னால் வந்து நின்றான். “குருவே! நான் வெளியே சென்று எத்தகைய வாழ்க்கை வாழ வேண்டும் எனத் தாங்கள் விரும்புகிறீர்கள்?” – என்று கேட்டான். அதற்கு குரு “தூரதேசப் பயணம் சென்றுவா!” – என்று பதில் அளித்தார். அவர் எப்போதும் அப்படித்தான். பூடகமாகவே பேசுவார். அவர் கூறும் வார்த்தைகளின் பொருளை உடனடியாக விளங்கிக் கொள்ளமுடியாது. காலத்தின் போக்கில் தான் புரிந்து கொள்ளமுடியும். அப்போது அவ்வார்த்தைகள் பாற்கடலைக் கடைந்து தேவர்கள் பெற்றுண்ட அமிர்தம் போன்று உவப்பான பலன் தரும். சீடன் குருவை வணங்கிவிட்டு புறப்பட்டான்.
குருவின் கட்டளைப்படி நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். எத்தகைய பயணத்தை மேற்கொள்வது? சீடனுக்கு உடனடியாக இந்த அகன்ற தேசத்தின் ஊடாக வடகோடியில் ஆரம்பித்து தென்முனை வரை பாய்ந்தோடிவரும் வற்றாத அந்த புண்ணிய நதிதான் ஞாபகத்திற்கு வந்தது. ஆற்றங்கரைகள் தானே நாகரீகங்கள் தோன்றிய இடம்? ஆற்றங்கரைகள் தானே மண்ணைப் பண்படுத்தி முதன் முதலாக உழவிற்கும் வித்திட்ட இடம்? அப்படிப்பட்ட நதியின் கரையை  ஒட்டியே தனது பயணத்தை அமைத்துக் கொள்வது என தீர்மானித்தான் அந்தச்சீடன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 17 May 2017

தமிழறிஞர்களில் கால்டுவெல்

தமிழகம் சங்ககாலத்திற்கும் முற்பட்டக் காலத்திலிருந்தே யவனர் எனும் ஐரோப்பிய நாட்டவருடன் வாணிக உறவுகொண்டு விளங்கியதைச் சங்க இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. யவனரைத் தொடர்ந்து இசுலாமியர் அரபு நாடுகளிலிருந்து வந்து வாணிபம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போர்ச்சுக்கல், டச்சு, ஆங்கிலேயர், பிரான்சு போன்ற பிற ஐரோப்பிய நாட்டவரும் தமிழகத்தோடு தொடர்புகொள்ள விழைந்தனர். இவர்கள் வெறும் வாணிபத்தோடு நில்லாமல் தம் சமயத்தையும் பரப்ப முற்பட்டனர். இப்பணியில் மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து முதலில் தமிழைப் பயின்றனர். பயிலப்பயில பைந்தமிழின் இனிமையில் தம்மை மறந்து மனதைப் பறிகொடுத்துத் தமிழுக்குத் தொண்டு செய்யத் தலைப்பட்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்வளர்ச்சி

Siragu tamil1


கல்வெட்டுக்களிலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்ட தமிழ்மொழி இம்மேலைநாட்டவர்களால் அச்சு இயந்திரத்தில் அச்சேறியது. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அச்சு இயந்திரங்கள் பாதிரிமார்களிடத்தும் கிழக்கிந்தியக் கம்பெனிகளிடத்தும் மட்டுமே இருந்தது. பொதுமக்களின் கைக்கு வரவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 16 May 2017

அமெரிக்கச் சிறுவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஃபிட்ஜெட் ஸ்பின்னர்


Siragu Fidget Spinner2

இணையத்தில், “Fidget Spinner” (ஃபிட்ஜெட் ஸ்பின்னர்) எனக் கூகுள் இணையத்தேடல் செய்தால், ஒரு மில்லியனுக்கும் அதிகமான முடிவுகளை அரை நொடியில் (About 1,130,000 results – 0.51 seconds) அது அள்ளி வழங்கும். இது என்ன? நாம் கேள்விப்படாத ஒரு புதுச் செய்தியாக இருக்கிறதே! என்று (குறிப்பாக இளம் பெற்றோர்களைத் தவிர்த்த) பெரும்பாலோர் வியப்போடு மேலும் “கூகுள் தேடலின் போக்கு” (Google Trends) எந்த வகையில் செல்கிறது என்று ஆராய முனைவோம். அத்தேடலில் “Fidget Spinner” என்னும் இணையத்தேடல், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் துவங்கி, தொடர்ந்து வந்த ஒரு ஒன்றரை மாதத்தில் இந்த அளவு பிரபலமாகி இருப்பதைக் கண்டு வியப்படையலாம். அது சரி! ஃபிட்ஜெட் ஸ்பின்னர் என்றால்தான் என்ன? என்ற கேள்விக்கு விடை: இது அமெரிக்கச் சிறுவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஒரு விளையாட்டு பொம்மை. 

கேரம் போர்ட் ஸ்ட்ரைக்கர் அளவில், பல அமைப்பில் உள்ள ஒரு வில்லை. இதனை கையால் சுழற்றிவிட்டால், சுழற்றுபவரின் திறமைக்கேற்ப, ஃபிட்ஜெட் ஸ்பின்னர் தயாரிக்கப்பட்ட தரத்திற்கேற்ப அதிக அளவு 3 நிமிடங்கள் வரைத் தொடர்ந்து சுழலும் தன்மை கொண்டது. இரவில் ஒளிர்வது, பலநிறங்களில் உள்ளவை, இரண்டு முனைகள் மூன்று முனைகள் கொண்டவை, உலோகம், பிளாஸ்டிக், பீங்கான், பேட்மேன்-சூப்பர்மேன் படங்களுடன் எனப் பல வகைகளிலும் ஃபிட்ஜெட் ஸ்பின்னரை வாங்கி விரல்களுக்கு இடையில் சுழற்றிக் கொண்டிருக்கலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 10 May 2017

தமிழ்ப் பாவை வாழி!(கவிதை)


tamil-mozhi-fi

ஆரெழில் காவிரி வளநாடுடைத் தென்னாடு
மாச்சிறப்பினை கொண்ட வளநாடு தென்னாடு
பண்ணெடும் வரலாறாம் அவள்கொண்ட பண்பாடு
பல்இன மாந்தரைப் பெற்றவளாம் புகழ்செழுந்
தமிழ்மொழிப் பால்கொடுத்து வளர்த்த வளாம்அவள்
திருமேனி போல்வைகை பொருணை பாலாறு
தங்கத் தோழியுடனே தாயாய் நின்றுஎம்மை
தாலாட்டிச் சீராட்டிப் பாராட்டிப் பெற்றவளாம்
உயிர்தமிழ் மொழியாய் பிறந்திட்ட பாவையவள்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Tuesday, 9 May 2017

தமிழாய்வின் செம்மைக்குக் கணினித் துறை


Siragu tamil in computer2

தமிழாய்வின் செம்மைக்குக் கணினியின் துணை என்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. தகவல்கள் திரட்டல், பதிதல், ஆராய்தல், ஒழுங்குபடுத்தல், எண்ணிக்கையிடல் போன்ற பணிகளுக்கு இன்றைக்குக் கணினி மிக மிக அவசியமானதாக இருக்கிறது. கணினி உதவியுடன் செய்யப்படாத தமிழ் ஆய்வுகளின் துல்லியத்தன்மை சந்தேகத்திற்கு இடமாகின்ற அளவிற்கு கணினி உதவி தேவைப்படுவதாக உள்ளது.


தமிழ்மொழியின் சொல்வளம், தொடர் கட்டமைப்பு, பொருள் வளம் மிக முக்கியமான முன்னேற்றத்தை இன்னும் சில காலங்களில் பெறப்போவதற்கான அறிகுறிகள் தற்போது தெரிகின்றன. தமிழகம் சார்ந்த கணினி அறிஞர்கள், கணித அறிஞர்கள், பிறதுறை அறிஞர்கள் ஆகியோரின் வருகை தமிழின் அக, புற வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 8 May 2017

பேச்சுக்கலை


Siragu best speaker1

பேச்சுக் கலை கொண்டோரின் ஆற்றல் பிறரை எளிதில் அவர்கள் கொள்கை, கோட்பாட்டினை ஏற்க வைத்திடும்.

திருவள்ளுவர் சிறந்த பேச்சிற்கான இலக்கணம் பற்றிக் கூறும் போது,

“கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் ”
என்கிறார்.

அதாவது சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.

அத்தகைய சொல்வன்மை பெற்றோர் உலக அளவில், தமிழக அளவில் ஏராளமானோர் உண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/

Sunday, 7 May 2017

உலக ஊடக உரிமை நாள்


3may_2010_eng

உலக ஊடக உரிமை நாள் (World Press Freedom Day) என்பது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 3 தேதி கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம், பத்திரிக்கை சுதந்திரத்தைப் பரப்புவதற்கும், பேச்சுரிமை சுதந்திரத்தை நினைவூட்டவும் ஏற்படுத்தப்பட்டதாகும். இதன் சிறப்பு என்னவென்றால், ஐ.நா.வின் ‘மனித உரிமை சாசனம்’ பகுதி 19-ல் இடம் பெற்றிருக்கிறது . 1993 ஆம் ஆண்டிலிருந்து, ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, கடைபிடித்து வருகிறார்கள்.


இதற்கு முன்னதாகவே, 1991- ஆம் ஆண்டிலேயே ஆப்பிரிக்க நாட்டு கூட்டுப் பத்திரிகைகளால், “பத்திரிகை சுதந்திர சாசனம்” என்ற கோரிக்கையை, பத்திரிக்கைகளின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாக முன் வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சிதான் இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். யுனெஸ்கோ நிறுவனத்தினர், இதற்கென பங்களிப்புச் செய்பவர்களில், ஒருவரைத் தேர்ந்தெடுத்து, விருதும் வழங்கி வருகிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 3 May 2017

தென்னாட்டுக் குடிகள்! (கவிதை)


Siragu-tamilan1

தென்னாட்டுக் குடிகளே கேட்டீரோ? –என்
தென்னாட்டுக் குடிகளே கேட்டீரோ?
நரிமுகமாம் வடநாட்டுக் குடியொருவன்
நஞ்சை கண்டத்தில் ஒளித்து வைத்து
நற்குடி வாழுந் தென்னாட்டு இனத்தார்

வாழ்கவென புகழ்ந்தார் முன்னே! கேட்டீரோ?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5/

Tuesday, 2 May 2017

புத்தக அறிமுகம்: பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை


Siragu-poonaachchi2

மனித மனம் எப்பொழுதும் உணர்ச்சிகளுக்கு அடிமைபட்டவைதான். மனதில் தோன்றும் பல்வேறு இனம் புரியாத உணர்ச்சிகளுக்கு உரை எழுதிவிட முடியுமா என்ன?


கூரை வீட்டின் மீது அமர்ந்து சீண்டிக் கொண்டு தன் இணையை தன் கவனத்தின் பக்கம் இழுக்க அவைகள் செய்கிற சேட்டைகள் நீள் இரவின் கனவில் நினைத்துப் பார்க்கிற போது அதிலிருந்தும் ஒரு கவிதையை எழுதிவிடலாம். அவை கொஞ்சல் மொழியுணர்ச்சிக்கு இடம் அளிப்பவையாகவே இருக்கக் கூடும். கோழி இனத்தில் பார்க்கிற போதும் கூட அவைகள் கிராம நாகரீக வாழ்வியலுடன் ஒன்றிப் போனவையே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 1 May 2017

தமிழகத்தின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க ஊட்டியில் மோயாற்றின் மீது அணை கட்டத் தேவையா?


Siragu Moyar River1

“ஊட்டியின் மோயாற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், அதன் வடக்குப் பகுதி கர்நாடக எல்லையிலும் பாய்கிறது. கர்நாடகாவில் பாயும் நீரானது கபினி மற்றும் நுகு அணைகளைச் சென்றடைகிறது. பின்னர் இரு அணையிலிருந்தும் வெளியேறும் நீரானது ஒன்றாக இணைந்து, டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியுடன் இணைந்து, மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாகத் தமிழகத்திற்குள் பாய்கிறது.”

கடந்த சில நாட்களாகத் தமிழக உழவர்களுக்கு உதவும் வகையில் சிந்தித்த சிலர் வெளியிட்டுள்ள தகவல் இது. இவ்வாறு கர்நாடகாவில் பாயும் மோயாற்றின் வழியாக கர்நாடகா பலன் அடைவதாகவும், இதனால் அவர்களுக்கே நாம் தான் நீர் தருகிறோம் என்றும், அதை அவர்கள் தமிழகத்திற்குத் தரமறுக்கிறார்கள் என்றும், நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்துக் கொண்டுள்ளது என்றும், மோயாற்றின் மீது நாம் ஓர் அணையைக் கட்டிவிட்டோம் என்றால் கர்நாடகா நீருக்காக நம்மைக் கெஞ்சும் நிலை உருவாகிவிடும் என்றும், இந்த உண்மை தெரிந்தும் அரசியல்வாதிகள் தங்கள் தன்னலத்தின் காரணமாக இத்தீர்வை எடுக்கும் முயற்சியை மேற்கொள்வதில்லை என்றும் பலமான கருத்துப் பரப்புரை சமூக வலைத்தளங்களிலும் மாறி மாறிப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.