வட அமெரிக்காவில் ஆங்காங்கேயிருக்கிற
தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்க் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கிவரும்
அமைப்புதான், வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை என்பதாகும். ஆண்டுதோறும்
அதன் ஆண்டு விழாவினை, வடஅமெரிக்காவிலிருக்கிற ஏதோவொரு நகரில் அமெரிக்கத்
தமிழர், திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். அதன்படி 2017ஆம்ஆண்டுக்கான
விழாவினை, எதிர்வரும் ஜூலை முதலாம் நாள் துவங்கி நான்காம் நாள் வரையிலும்
மின்னசோட்டா மாகாணத்திலிருக்கிற மினியா போலிசு செயிண்ட்பால் இரட்டைநகர்ப்
பகுதியில், மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும், தமிழ்ச்சங்கப் பேரவையுமிணைந்து
நடத்துகின்றன.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின்
ஒவ்வொரு ஆண்டு விழாவும், தமிழ்இலக்கியம், பண்பாடு, சமூகத்திற்குப்
பணியாற்றிய ஆன்றோர் நினைவாக இடம்பெறுவது மரபாகும். அந்த மரபுக்கொப்ப, இந்த
ஆண்டுக்கான விழாவானது நாடகக்கலையின் தலைமையாசிரியரான சங்கரதாசு சுவாமிகளின்
நூற்றைம்பதாவது பிறந்தநாள் விழாவாகக் கொண்டாடப்படுவதோடு மட்டுமல்லாமல்,
‘தமிழர் கலையைப் போற்றிடுவோம்! தமிழர் மரபினைக் மீட்டெடுப்போம்!!’ என்கிற
முகப்பு மொழிக்கொப்ப நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றனயென்பது
குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment