தற்போது நிலவும் தமிழக அரசியல் சூழல்
மிகவும் வருத்தப்படக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. முன்னாள் முதல்வர் செல்வி.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நம் மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொன்றும்
புதிராகவே காணப்படுகின்றன. ஆளும் மாநில கட்சி அதிமுக-வை பலகீனமடையச்
செய்து, இரு முக்கிய குழுக்களாகவும், மற்றும் சில சிறிய குழுக்களாகவும்
பிரித்து, அக்கட்சியைத் தன வசம் வைத்துக்கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு.
இந்தியாவிற்கே, ‘மாநிலத்தில் சுயாட்சி,
மத்தியில் கூட்டாட்சி’ என்று முழங்கி, புரிய வைத்தவர்கள் தமிழக மக்கள்
மற்றும் அப்போதைய அரசியல் தலைவர்கள். ஆனால், அப்பேற்பட்ட தமிழகத்திற்கு
இன்று ஏற்பட்டிருக்கும் நிலைமை என்னவோ பொம்மலாட்ட அரசு தான். நம் மாநில
ஆட்சியின் கயிறு மத்திய அரசிடம் முழுவதுமாக போய் விட்டது என்றே சொல்லலாம்.
அந்த அளவிற்கு நம் ஆட்சியாளர்கள் கைப்பாவைகளாக மாறி விட்டிருக்கின்றனர்
என்பது வேதனைக்குரிய ஒன்று. கண்டனத்துக்குரிய ஒன்று.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment