வள்ளுவன் இயற்றிய உலகப் பொதுமறையில் பெருமை என்ற அதிகாரத்தின் 2 வது குறள் -
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” !!
பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்கு உரக்க உரைத்திற்று.
ஆனால் பிறப்பில் பேதம் கற்பிக்கும் சாதி
தமிழ்ச் சமூகத்தில் நுழைந்து நம்மை பிளவுபடுத்தியது. சாதி என்பது
ஏற்றத்தாழ்வுகள் கொண்ட ஒரு சமூக அவலம், அது ஒரு உரிமை மீறல், பாகுபடுத்தி
நடத்துதல், ஒரு வன்முறை என்பதை பலரும் உணரவேயில்லை. சாதிய படிநிலையில் மேல்
சாதி உயர்ந்த சமூக நிலையும், கீழ் சாதி தாழ்ந்த சமூக நிலையும்
கொண்டவர்களாக கருதப்படுகின்றார்கள். இந்நிலையான வேறுபாட்டை நிலைநாட்டும்
வண்ணம் பல்வேறு சமூக மரபுகளும் சடங்குகளும் அம்மக்களை முட்டாளாக்கி
வைத்திருக்கின்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment