மாதவிடாய் பற்றி இன்றும் பலர் தவறான பழக்க
வழக்கங்களைக் கொண்டு, பெண் உடலின் இயற்கை நிலைகளைப் பற்றி அறியாது
செயல்படுகின்றனர். முதலில் மாதவிடாய் என்றால் என்ன? என்பதை அறிவியல்
விளக்கத்தோடு புரிந்து கொள்ளுதல் அவசியம். ஒரு பருவம் அடைந்த பெண்ணின்
உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றம்.
இது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள ஒரு உறுப்புகளில் ஒன்றான
கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3-7 நாட்கள் குருதியுடன்
சேர்ந்து கருப்பையின் உள் சீதமென்சவ்வும் வெளியேறுவதை குறிக்கும். இவ்வளவு
தான் மாதவிடாய்க்கான அறிவியல் விளக்கம்.
ஆனால் நம் நாட்டில் மாதவிடாயின் போது
பெண்கள் படும் பாடு இருக்கின்றதே? பண்பாடு எனும் பெயரில், மதத்தின் பெயரில்
மாதவிடாய் என்றாலே மிகப் பெரிய அசுத்தம் என்பது போன்று இங்கு
சித்தரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment