இணையத்தில், “Fidget Spinner” (ஃபிட்ஜெட்
ஸ்பின்னர்) எனக் கூகுள் இணையத்தேடல் செய்தால், ஒரு மில்லியனுக்கும் அதிகமான
முடிவுகளை அரை நொடியில் (About 1,130,000 results – 0.51 seconds) அது
அள்ளி வழங்கும். இது என்ன? நாம் கேள்விப்படாத ஒரு புதுச் செய்தியாக
இருக்கிறதே! என்று (குறிப்பாக இளம் பெற்றோர்களைத் தவிர்த்த) பெரும்பாலோர்
வியப்போடு மேலும் “கூகுள் தேடலின் போக்கு” (Google Trends) எந்த வகையில்
செல்கிறது என்று ஆராய முனைவோம். அத்தேடலில் “Fidget Spinner” என்னும்
இணையத்தேடல், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் துவங்கி, தொடர்ந்து வந்த ஒரு
ஒன்றரை மாதத்தில் இந்த அளவு பிரபலமாகி இருப்பதைக் கண்டு வியப்படையலாம். அது
சரி! ஃபிட்ஜெட் ஸ்பின்னர் என்றால்தான் என்ன? என்ற கேள்விக்கு விடை: இது
அமெரிக்கச் சிறுவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஒரு விளையாட்டு பொம்மை.
கேரம் போர்ட் ஸ்ட்ரைக்கர் அளவில், பல அமைப்பில் உள்ள ஒரு வில்லை. இதனை
கையால் சுழற்றிவிட்டால், சுழற்றுபவரின் திறமைக்கேற்ப, ஃபிட்ஜெட் ஸ்பின்னர்
தயாரிக்கப்பட்ட தரத்திற்கேற்ப அதிக அளவு 3 நிமிடங்கள் வரைத் தொடர்ந்து
சுழலும் தன்மை கொண்டது. இரவில் ஒளிர்வது, பலநிறங்களில் உள்ளவை, இரண்டு
முனைகள் மூன்று முனைகள் கொண்டவை, உலோகம், பிளாஸ்டிக், பீங்கான்,
பேட்மேன்-சூப்பர்மேன் படங்களுடன் எனப் பல வகைகளிலும் ஃபிட்ஜெட் ஸ்பின்னரை
வாங்கி விரல்களுக்கு இடையில் சுழற்றிக் கொண்டிருக்கலாம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment