தமிழாய்வின் செம்மைக்குக் கணினியின் துணை
என்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. தகவல்கள் திரட்டல், பதிதல், ஆராய்தல்,
ஒழுங்குபடுத்தல், எண்ணிக்கையிடல் போன்ற பணிகளுக்கு இன்றைக்குக் கணினி மிக
மிக அவசியமானதாக இருக்கிறது. கணினி உதவியுடன் செய்யப்படாத தமிழ் ஆய்வுகளின்
துல்லியத்தன்மை சந்தேகத்திற்கு இடமாகின்ற அளவிற்கு கணினி உதவி
தேவைப்படுவதாக உள்ளது.
தமிழ்மொழியின் சொல்வளம், தொடர்
கட்டமைப்பு, பொருள் வளம் மிக முக்கியமான முன்னேற்றத்தை இன்னும் சில
காலங்களில் பெறப்போவதற்கான அறிகுறிகள் தற்போது தெரிகின்றன. தமிழகம் சார்ந்த
கணினி அறிஞர்கள், கணித அறிஞர்கள், பிறதுறை அறிஞர்கள் ஆகியோரின் வருகை
தமிழின் அக, புற வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகின்றன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment