நீண்ட குருகுல வாசம் முடிந்து ஒரு சீடன்
வெளியேறிச் செல்லும் நாள் வந்தது. ஆசிபெறுவதற்காக அவன் குருவின் முன்னால்
வந்து நின்றான். “குருவே! நான் வெளியே சென்று எத்தகைய வாழ்க்கை வாழ
வேண்டும் எனத் தாங்கள் விரும்புகிறீர்கள்?” – என்று கேட்டான். அதற்கு குரு
“தூரதேசப் பயணம் சென்றுவா!” – என்று பதில் அளித்தார். அவர் எப்போதும்
அப்படித்தான். பூடகமாகவே பேசுவார். அவர் கூறும் வார்த்தைகளின் பொருளை
உடனடியாக விளங்கிக் கொள்ளமுடியாது. காலத்தின் போக்கில் தான் புரிந்து
கொள்ளமுடியும். அப்போது அவ்வார்த்தைகள் பாற்கடலைக் கடைந்து தேவர்கள்
பெற்றுண்ட அமிர்தம் போன்று உவப்பான பலன் தரும். சீடன் குருவை வணங்கிவிட்டு
புறப்பட்டான்.
குருவின் கட்டளைப்படி நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். எத்தகைய
பயணத்தை மேற்கொள்வது? சீடனுக்கு உடனடியாக இந்த அகன்ற தேசத்தின் ஊடாக
வடகோடியில் ஆரம்பித்து தென்முனை வரை பாய்ந்தோடிவரும் வற்றாத அந்த புண்ணிய
நதிதான் ஞாபகத்திற்கு வந்தது. ஆற்றங்கரைகள் தானே நாகரீகங்கள் தோன்றிய இடம்?
ஆற்றங்கரைகள் தானே மண்ணைப் பண்படுத்தி முதன் முதலாக உழவிற்கும் வித்திட்ட
இடம்? அப்படிப்பட்ட நதியின் கரையை ஒட்டியே தனது பயணத்தை அமைத்துக் கொள்வது
என தீர்மானித்தான் அந்தச்சீடன்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment