உலக ஊடக உரிமை நாள் (World Press Freedom
Day) என்பது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 3 தேதி கொண்டாடப்படுகிறது. இதன்
நோக்கம், பத்திரிக்கை சுதந்திரத்தைப் பரப்புவதற்கும், பேச்சுரிமை
சுதந்திரத்தை நினைவூட்டவும் ஏற்படுத்தப்பட்டதாகும். இதன் சிறப்பு
என்னவென்றால், ஐ.நா.வின் ‘மனித உரிமை சாசனம்’ பகுதி 19-ல் இடம்
பெற்றிருக்கிறது . 1993 ஆம் ஆண்டிலிருந்து, ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, கடைபிடித்து வருகிறார்கள்.
இதற்கு முன்னதாகவே, 1991- ஆம் ஆண்டிலேயே
ஆப்பிரிக்க நாட்டு கூட்டுப் பத்திரிகைகளால், “பத்திரிகை சுதந்திர சாசனம்”
என்ற கோரிக்கையை, பத்திரிக்கைகளின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி
செய்யும் விதமாக முன் வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சிதான் இந்தத் தீர்மானம்
ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். யுனெஸ்கோ நிறுவனத்தினர், இதற்கென பங்களிப்புச்
செய்பவர்களில், ஒருவரைத் தேர்ந்தெடுத்து, விருதும் வழங்கி வருகிறார்கள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment