துறைமங்கலம் சிவப்பிரகாசர் சிறந்த
பக்தியாளர். கற்பனைக் களஞ்சியம் என்று புகழப்படுபவர். முருகன் மீதும் தன்
குருவான சிவஞான பாலய சுவாமிகள் மீதும் பல பனுவல்களைப் பாடியவர். இவரின்
பாடல்களில் கற்பனை வளம் மிகுந்து காணப்படும். இவர் பாடியனவாகத் தற்போது
முப்பத்து நான்கு நூல்கள் கிடைக்கின்றன. புராணங்கள், சிற்றிலக்கியங்கள்
பாடுவதில் வல்லவரான இவர் பாடிய நீதி நூல் நன்னெறி என்பதாகும். நாற்பது
பாடல்களை உடைய இந்நூல் ஒவ்வொரு பாடலிலும் ஒரு நற்கருத்தை விளக்குகிறது.
அதற்கு ஏற்ற உவமையைக் காட்டி மேலும் பொருள் விளக்கம் செய்கிறது. நாற்பது
பாடல்கள், நாற்பது உவமைகள், நாற்பது கருத்துகள் என்ற நிலையில்
படைக்கப்பெற்ற நூல் நன்னெறியாகும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment