Monday 17 July 2017

தமிழோங்கிச் சிறக்குதென்று கொட்டு முரசே – பேரவையின் தமிழ் விழா 2017


Siragu fetna1
 கொட்டு முரசே, தமிழோங்கிச் சிறக்குதென்று கொட்டு முரசேயென பெருமுரசு முழங்கவும், தவில், நாகசுரமுள்ளிட்ட இசைக்கருவிகள் ஒலிக்கவும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா முதன் முறையாக மினசோட்டா மாகாணத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முத்தமிழான “இயல், இசை, நாடகத்தையும்” போற்றும் வகையில் இவ்வாண்டு விழா அமைந்தது. தமிழ்த்தாய் வாழ்த்தோடும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க நாட்டுப்பண்ணும் இசைக்க மின்னசோட்டாவின் மினியாபொலிசு நகரில் விழா எழுச்சியுடன் தொடங்கியது. அதனையடுத்து, மங்கள பறை, தவில் இசையினை மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த நுண்ணிசைக் கருவி மாணவர்கள், தத்தம் ஆசான்களான தவில் கலைஞர்  சிலம்பரசன் கசேந்திரன், நாதசுரக்கலைஞர் இராமச்சந்திரன், வெங்கடசாமி ஆகியோருடன் இணைந்து அரங்கேற்றம் செய்தனர். நிமிர்வு பறையிசைக் குழுவின் பறையிசைக் கலைஞர் சக்தி பறையிசையை அதிரவிட, சிலம்பம், கரகாட்டம் உள்ளிட்ட தமிழர் மரபுக் கலைகள் விழா மேடையை அலங்கரித்தன.
Siragu fetna4
நெஞ்சக்களிப்பினில் கூத்தைச் சேர்க்கும் கனற் பொருளே, ஆழ்நீரில் வெளிப்பட எழும் கதிரேயென்கிற தமிழ்ப் போற்றுதலுடனான திருக்குறள் மறையோதலைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் 
மேடையேறி பெருமுரசை அடித்து நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

Siragu fetna9

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment