மத்திய
பா.ச.க அரசின் இந்த நீட் தேர்வின் மூலம், தமிழக மாணவர்களின்
மருத்துவக்கனவு, இலக்குகள் தகர்க்கப்பட்டிருக்கிறது என்பது நிதர்சனமான
உண்மை. நாட்டிலேயே அதிக மருத்துவக்கல்லூரிகளைப் பெற்றிருப்பதும், அதிக
திறமையான மருத்துவ மாணவர்களைக் கொடுப்பதும் நம் மாநிலமே. அப்படி
இருக்கையில், 2017 ஆம் ஆண்டான இவ்வாண்டு கடைசி இடத்திற்கு சென்றிருக்கிறது
என்றால், அதற்குக் காரணம் நீட் தேர்வு தான்.!
பொதுத்தேர்வு தேவையில்லாத ஒன்று என்பது
தான் நம் நிலைப்பாடு. இதன் மூலம் கிராமப்புற, ஏழை மாணவர்கள்
பாதிப்படைவார்கள், மேலும் சமூகநீதிக்கு எதிரான, அதாவது இடஒதுக்கீட்டிற்கு
எதிரான ஒரு செயல் தான் இந்த பொதுத்தேர்வு என்ற நீட் தேர்வு. பொதுத்தேர்வு
என்ற போர்வையில், கேள்வித்தாள்கள் மாநிலத்திற்கு மாநிலம், குறிப்பாக
பிராந்திய மொழி கேள்வித்தாள்கள் மாறுப்பட்டிருந்தன. கடினமான கேள்விகள்
கேட்கப் பட்டிருந்தன. மறுத்தேர்வு வேண்டும் என்று கேட்டிருந்தும், அது
உயர்நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை மேலும் மாநில அரசு கொண்டுவந்த,
மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 விழுக்காடு இடமும்
கொடுக்கப்படக் கூடாது என தீர்ப்பு வழங்கி இருக்கிறது சென்னை
உயர்நீதிமன்றம்.!
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment