கடைச் சங்க காலத்தில் படைக்கப் பெற்ற
இலக்கியங்கள் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் ஆகும். பத்து
நெடும்பாடல்கள் கொண்ட பத்துப்பாட்டு என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள குறுகிய
அடிகளை உடைய பாடல்களுள் (261 அடிகள்) ஒன்று குறிஞ்சிப்பாட்டு ஆகும்.
இக்குறிஞ்சிப்பாட்டு கபிலரால் பாடப் பெற்றது. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத்
தமிழ் அறிவிப்பதற்காக இந்நூல் பாடப் பெற்றுள்ளது. இதனை “பெருங்குறிஞ்சி”
என்றும் அழைக்கின்றனர். இதற்குக் காரணம் குறிஞ்சித்திணை சார்ந்த பாடல்களுள்
இதுவே நீளமானதாகும்.
இது அகப்பொருள் (காதல்) சார்ந்தது.
அறத்தொடு நிற்றல் என்ற துறையில் அமைக்கப் பெற்றுள்ளது. இதன் பெருமைகளுள்
ஒன்று சங்ககால தொண்ணூற்றொன்பது பூக்கள் இதனுள் இடம் பெறச் செய்யப்
பெற்றிருப்பது ஆகும். இந்நூலில் தலைவன், தலைவி, தோழி, செவிலி போன்ற சில
பாத்திரங்கள் மட்டுமே இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளன. இப்பனுவல் நாடகச்
சாயலை உடையது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment