19-ம் நூற்றாண்டின் இறுதிக்காலம் மற்றும்
20-ம் நூற்றாண்டின் முதல் காலகட்டம், தமிழ் இலக்கிய உலகில் புதிய
அத்தியாயத்தை ஏற்படுத்திய காலமாக வரையரை செய்யலாம். சங்ககாலத்தின்
மரபுசார்ந்த கவிதைகளை புனையும் போக்கு பிற்காலத்திலும் தொடர்ந்தன.
குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் 19-ம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த பெரும்
நிலக்கிழார்களின் கைகளில் கவிதையின் மரபு சிக்கிக் கொண்டு சல்லாபத்திற்காக
மட்டுமே பயன்படக்கூடியதாக பார்க்கப்பட்ட காலமும் இதுவே.
இப்போக்குகளை மாற்றியவர் மகாகவி எனப்
புகழப்பட்ட பாரதியார். மேலும் அக்காலகட்டமும் இந்திய சுதந்திர வேட்கைக்கான
களம். வீச்சுடன் செயல்பட்ட காலம். அவர் கவிதையை மக்களை நோக்கி படைத்தார்.
அதன் விளைவு மேலைநாட்டு கவிகளின் அறிமுகம் பாரதியாருக்குக் கிட்டியது.
அவ்வாறு அமெரிக்கக் கவி ஷெல்லியின் “புல்லின் இதழ்கள்” எனும் தொகுப்பு
பாரதிக்கு அறிமுகம் ஆனது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment