“கவிதா” என்ற அதட்டலுடன் கூடிய மாதவனின்
குரலைக்கேட்டவுடன், ஆசையுடனும், ஏக்கத்துடனும் சன்னலோரமா நின்று பள்ளி,
கல்லூரி செல்லும் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டிருந்த கவிதா சற்றே
தூக்கிப்போட்டவளாக
” இதோ வரேன்ங்க” என்றாள்.
‘ உனக்கு இதே வேலையா போச்சு. காலை
நேரத்துல போய் அங்கே நின்னுகிறே. அப்படி என்னத்தான் பாக்குறே, நேரமாச்சுல.
கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆச்சு.. இன்னும் உனக்கு மண்டையில ஏற மாட்டேங்குது.
அம்மாவுக்கு மாத்திரை கொடுத்தியா. ‘
‘ கொடுத்துட்டேன் ‘
‘கொடுத்து அரைமணி நேரத்துல சாப்பாடு
கொடுக்கணும்.. தெரியும்ல, என்ன சொன்னாலும் முழிக்கிறே. உனக்கு ஏற்கனவே நான்
சொல்லி இருக்கிறேன். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே, என் அம்மாவுக்காகத்
தான், புரியுதா. இன்னொரு தடவை சொல்ற மாதிரி வச்சுக்காதே. சரியா. ஒகே, போய்
சாப்பாடு எடுத்து வை .’
தன் பள்ளிப்பருவ நாட்களை
நினைத்துக்கொண்டே, அடுக்களைக்குள் நுழைந்தாள் கவிதா. பத்தொன்பது வயதுடைய
சிறிய பெண். மாதவனுக்கோ முப்பத்திநான்கு வயது. பதினைந்து வயது வித்தியாசம்.
மாதவனின் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார். பி.காம் படித்து முடித்த
இரு மாதங்களிலேயே இந்த கோர நிகழ்ச்சி அவர்களின் வீட்டில். உடனே அவருடைய
வங்கிப்பணி இவனுக்கு கிடைத்துவிட்டது. இவனுக்கு மூன்று தங்கைகள். மூவரையும்
நன்கு படிக்கவைத்து, கல்யாணம் செய்து கொடுத்தப்பிறகு தான், தான் கல்யாணம்
செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருந்து, அனைத்தையும் முடித்தப்பிறகே
கவிதாவை கைப்பிடித்தான்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment