இலக்கியத் திறனாய்வு என்பது தமிழ்
இலக்கியப் பரப்பிற்குக் கிடைத்த புதிய துறையாகும். இத்துறை வளர்ந்து ஒரு
நூற்றாண்டு காலப்பகுதியைத் தற்போது நெருங்கியிருக்கிறது. தமிழ் கற்றோரின்,
கற்போரின் இலக்கியப் பயிற்சியை, இலக்கிய ஆராய்ச்சியை நெறிப்படுத்தி
வழங்கும் இத்துறை தமிழ்க்கல்வியோடு பிரிக்க முடியாத இடத்தை இன்றைக்குப்
பெற்றுவிட்டது. உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்
முதலானவற்றின் தமிழ் வளர்ப்புத் திறன் அவ்வவ் நிலையங்களில்
உருவாக்கப்பெறும் ஆய்வேடுகளின் தரம், எண்ணிக்கை கொண்டே தற்போது மதிப்பிடப்
பெற்று வருகின்றன.
இன்றைக்குத் தமிழ் இலக்கியங்களைத்
திறனாய்வு செய்வதில் உலகு தழுவிய நிலையில் வரையறுக்கபட்ட நெறிகள், மொழிநடை
முதலானவை நிலைபெறுத்தப்பட்டுவிட்டன. அயல்நாடுகளின் அரசியல், தத்துவஇயல்,
சமூகவியல், உயிரியல் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களை
மதிப்பிடும் உலகு தழுவிய கருத்து நிலைக்கு இன்றைய தமிழ் இலக்கியத்
திறனாய்வு வளர்ந்திருக்கிறது. தமிழுக்கே உரிய மரபு சார்ந்த திறனாய்வு
முறைகளும் புறம் தள்ளப்பட்டுவிடாமல் இன்றைய ஆய்வுலகில் எடுத்தாளப் பெற்றும்
வருகின்றன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment