தற்கால மனித வாழ்விற்கு இன்றியமையாத
எரிபொருளான கச்சா எண்ணெய் எடுக்க கடலிலும் (Offshore Drilling),
நிலத்திலும், எண்ணெய்க் கிணறுகளும், இயற்கை எரிவாயுக்கான கிணறுகளும்
தோண்டப்பட்டு வருவது கடந்த 150 ஆண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது. வணிக
நோக்கில் முதலில் ‘எட்வின் டிரேக்’ ( Edwin Drake) என்பவரால் 1859 ஆம்
ஆண்டு பென்சில்வேனியா (Pennsylvania ) வில் தோண்டப்பட்ட எண்ணெய்க்
கிணற்றின் ஆழம் வெறும் 69.5 அடிகள் மட்டுமே. குடிநீர் கிணறு போல சாதாரண ஒரு
ஆழத்தில் துவங்கி தொழில்நுட்பம் விரிவடைந்த காரணத்தினால் சில ஆயிரம்
அடிகள் எனத் தற்காலத்தில் தோண்டப்பட்டு எரிபொருட்கள் பெறப்படுகின்றன.
இந்நாட்களில், எண்ணெய் உற்பத்தி
செய்பவர்களால் ‘ஹைட்ரோ ஃபிராக்கிங்’ (hydrofracking, hydraulic fracturing,
hydrofracturing) என்னும் ‘நீரழுத்த பாறைத்தகர்ப்பு’ முறையாகிய ஒரு நவீன
தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு 10,000 அடிகளுக்கும் மேலான ஆழத்தில்,
படிமப்பாறைகளுக்கு இடையில் இருக்கும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு
ஆகியன பிரித்தெடுக்கப்படுகிறது. பாறைப்படிமங்களில் இருக்கும் எரிபொருட்கள்
கலவை ‘ஷேல்’ (shale) என்று குறிப்பிடப்படுகிறது. நீரும் கரிமமும் அதன்
வேதிப்பண்பு என்பதால் ‘ஹைட்ரோ கார்பன்’ (hydrocarbon) அல்லது
‘நீர்க்கரிமம்’ உற்பத்தி என்றும் குறிப்பிடப்படும் வழக்கம் தோன்றியுள்ளது.
ஆனால் அடிப்படை செயல்பாடு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதாகும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment