இதனையடுத்து, அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு, ரூ. 73/- என மிகவும் சரிந்துள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அன்றாடம், சாமானிய மக்கள் கழுத்தை நெறிப்பதாக இருக்கிறது. வேலைவாய்ப்பு எடுத்துக்கொண்டோமானால், தேர்தலின்போது சொன்னபடி, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டமாதிரி, பாதியளவு கூட வழங்க முடியவில்லை. படித்த பட்டதாரிகளை, பகோடா வியாபாரம் செய்யுமாறு மோடி அவர்களே ஆலோசனை கூறினார். மேலும், மத்தியப்பிரதேசத்தில், பா.ச.க ஆட்சியில் ஏற்பட்ட வியாபம் ஊழல், அதி பயங்கரமானது. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கையில் மிகப்பெரிய ஊழல். இதில் தொடர்புடையவர்கள், விசாரிக்கப்படுபவர்கள், விசாரிக்க வருபவர்கள் என பலரை மரணமடைய வைத்திருக்கிறது. பலரின் மர்மமான மரணத்திற்கு, இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அடுத்து, பா.ச.க-வின் இந்த 4 ஆண்டு ஆட்சியில், வாராக்கடன் தள்ளுபடி மட்டும் 7 மடங்கு அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/
No comments:
Post a Comment