புதுப்புது நூல்கள் பல நாள்தோறும்
வெளியிடப்படுகின்றன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நோக்கத்துடன் நூலாசிரியர்கள்
படைக்கின்றனர். அந்த நோக்கத்தைக் கொண்டும், அதை அந்நூலாசிரியர்
வெளிப்படுத்தும் திறமையைக் கொண்டும் அந்நூலின் சிறப்பு அமைகிறது.
அவ்வகையில் “கீழடி தமிழ் இனத்தின் முதல் காலடி” எனும் இந்நூல்
நோக்கத்திலும் அதை வெளிப்படுத்தும் திறமையிலும் மிக உயர்வானது.
இந்நூல் தமிழ் இனத்தின் தொன்மையை மிகத்
தெளிவாகவும், அழகாகவும் அதே சமயம் எளிமையாகவும் பறை சாற்றுகிறது. ஆகவே
தமிழ் அறிந்த மக்கள் அனைவரும் இந்நூலை வரவேற்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர்.
அது மட்டுமா? மறைந்து கிடக்கும் உண்மை வெளி வருகின்றது என்றால் அதை வரவேற்க
உலக மக்கள் அனைவருமே கடமைப்பட்டவர்கள் ஆவர். இந்நூல் மறைந்து கிடக்கும் பல
உண்மைகளை வெளிக் கொணர முயலும் கீழடி அகழாய்வு பற்றி முழுவதுமாக
விளக்குவதால் உலக மக்கள் அனைவருமே வரவேற்க வேண்டிய ஒரு நூலாகும். ஆகவே
வாய்ப்பு கிடைப்பவர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் மொழி பெயர்த்து
வெளியிடுவது மனித குலததிற்குச் செய்யும் உண்மையான வரலாற்றுத் தொண்டாக
அமையும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment