உலா இலக்கியங்களுக்கு முன்னோடி
முத்தொள்ளாயிரம் எனும்நூல். இது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என
ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பாடல்கள் பெரும்பாலும் சேரன்,
சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களைப் பற்றியது.
இந்நூல் பெயர்க்காரணம் மூன்று
வேந்தர்களைப் பற்றிய 900 பாடல்கள் என்றும், மூவேந்தருள் ஒவ்வொருவருக்கும்
900 பாடல்கள் என்ற இரு வேறு கருத்துகள் உண்டு. ஆக இந்த நூலின் மொத்த
பாடல்கள் 2700 ஆக இருந்திருக்க வேண்டும், ஆனால் நமக்கு 108 பாடல்களே
கிடைத்துள்ளன. புறத்திரட்டு என்பதில் இருந்துதான் இந்த 108 செய்யுள்களையும்
தொகுத்துள்ளனர். இந்த பாடல்கள் பெரும்பாலும் கைக்கிளையில் அதாவது
ஒருதலைக்காதல் கொண்டு பாடப்பட்டது. மூவேந்தர்களை எண்ணி அவர்கள். உலா வரும்
போது அவர்களைக் கண்டு காதல் கொள்ளும் பெண்களின் மொழியாக இப்பாடல்கள்
அமைந்துள்ளன. இந்த அடிப்படையைத்தான் பின்னாளில் பக்தி இலக்கியங்களில்
ஆழ்வார் நாயன்மார் கையாண்டு உள்ளனர், கடவுளை தலைவனாக நினைத்து உள்ளம் உருகி
பாடல்கள் எழுதினர் என்பது அறிஞர்களின் கருத்து.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment