மனைவிக்குப் பிடித்திருப்பது கணவனுக்குப்
பிடிக்காமலிருக்கலாம். ஆனால் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு
என்று நம் குழந்தைகளிடம் காட்டும் அன்பில் வித்தியாசம் இருக்கக் கூடாது.
ஆனால் கணவர் குழந்தைகளிடம் காட்டும் அன்பில் பேதம் இருக்கிறதே” என்று
சங்கரி சிந்தித்துக் கொண்டே மருத்துவமனையில் அவள் கணவர் படுத்திருந்த
அறைக்குள் நுழைந்தாள். ”நித்யா அப்பாவுக்கு இப்போ எப்படிமா இருக்கு?”
”அப்படியேதான் இருக்குமா. இன்னும் கண்ணைத்திறக்கல”.
அப்போது, “சிற்றம்பலம், சிற்றம்பலம்” என்று உரத்தக்குரலில் கூப்பிட்டுக் கொண்டே மருத்துவர் அறைக்குள் நுழைந்தார்..
”அவர் தூங்குகிறார் போலிருக்கு” என்றாள் சங்கரி.
மருத்துவர் சிற்றம்பலத்தின் மருத்துவ
அறிக்கையைப் பார்த்துவிட்டு நகரும்போது, ”இப்போது அவருக்கு எப்படியிருக்கு
மருத்துவர். எப்போ குணமாகும்” என்று கேட்டாள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment