பா.ச.க கட்சியின், திரு மோடி தலைமையிலான
மத்திய அரசாங்கம் ஆட்சி, கடந்த நான்கரை ஆண்டுகளாகவே, பலவித ஊழல்
பிரச்சனைகளில் சிக்கி, விமர்சிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் எல்லோரும்
அறிவோம். பணமதிப்பிழப்பில் கறுப்புப்பணம் திரும்பி வராததை மத்திய ரிசர்வ்
வங்கியே தெரிவித்துவிட்டது. இதன்மூலம் பலகோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக
குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டிருக்கின்றன. மேலும், வியாபம் ஊழலில்,
பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும்
வேளையில், சம்பந்தப்பட்டவர்கள் மர்மமான முறையில் கொலையும்
செய்யப்படுகிறார்கள் என்பதுவும் நமக்கு தெரிந்த ஒன்று தான். இந்நிலையில்
தான், பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக, ரபேல் பற்றிய ஊழல் கடந்த சில
மாதங்களுக்கு முன் வெடித்திருக்கிறது. இந்த ரபேல் விமான ஊழல் ஒப்பந்தத்தின்
மூலம், ஒரு லட்சத்து, 71 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்
சாட்டப்பட்டிருக்கிறது. மேலும், ரிலைன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்திற்கு பிரதமர்
மோடி அவர்களே, நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை, முன்னாள்,
பிரான்ஸ் அதிபர் காய்ஸ் ஹாலண்டே, டஸ்ஸால்ட் முத்த அதிகாரி, லொயிக் சிகலான்
ஆகியோரின் வாக்குமூலங்கள் உறுதி செய்கின்றன. எதிர்க்கட்சித்தலைவர் திரு.
ராகுல்காந்தி அவர்கள் இதனை வெளிகொண்டுவந்து, அதற்கான போராட்டங்களையும்
கையில் எடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment