சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூர்
நெற்குப்பை. ஆனால் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்கப் பணிகளை ஆற்றிய
பல இலக்கியவாணர்களைக் கொண்ட பேரூர் இவ்வூராகும். செட்டிநாடும் செந்தமிழும்
என்ற நூலினை எழுதிய சோம.லெ, தினமணியின் ஆசிரியராக விளங்கிய சம்பந்தம்
(இராம.திருஞானசம்பந்தம்), முதுபெரும் தமிழறிஞர் தமிழண்ணல், அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தின் இயங்கு சக்தியாக விளங்கிய லெ. ப. கரு. இராமநாதன்
செட்டியார் போன்ற பலர் பிறந்த மண் நெற்குப்பையாகும்.
அங்குப் பிறந்த இராம.பெரியகருப்பன் என்ற
தமிழண்ணல் தமிழ் ஆய்வுலகிலும், ஒப்பிலக்கியத்துறையிலும், சங்க இலக்கியத்
தனித்திறன் ஆய்விலும் சிறந்து விளங்கியவர். அவர் எழுதிய நூல்களின்
எண்ணிக்கை அவர் வாழ்ந்த ஆண்டுகளைப் போலவே எண்பத்தெட்டினைத் தொடும்.
தமிழண்ணல் செட்டிநாட்டு வழக்கப்படி
இராமசாமிச் செட்டியார் கல்யாணி ஆச்சி ஆகியோருக்குப் பிள்ளையாக வந்தவர்.
தமிழ் பண்டிதர் பட்டம் பெற்று அதன் பின் பொருளாதாரப் பட்டம் பெற்று
அதன்பின் தமிழ் உயர்கல்வி பெற்று முனைவர் பட்டம் பெற்றவர். அடிப்படையில்
இருந்து உயர்ந்தவர். காரைக்குடி மீனாட்சி சுந்தரேசர் பள்ளி ஆசிரியராகப்
பணியாற்றிய இவர் மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக
விளங்கி அதன் பின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக
விளங்கி, பின்னாளில் தேசியப் பேராசிரியராக முன்நின்றவர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment