கடந்தவாரம் 6-ந்தேதி, நடைபெற்ற உயர்கல்வி
கருத்தரங்கம் ஒன்றில், மாண்புமிகு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித்
அவர்கள், உரையாற்றியபோது, “அதிமுக ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய்
கைமாறிதான் துணை வேந்தர்களுக்கான நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன” என்று
பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இந்த
உரைக்குப்பிறகு, தமிழ்நாட்டின் பல அரசியல் தலைவர்கள் தங்கள் சந்தேகங்களை
எழுப்பினார்கள். எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களும்,
இதனை தெளிவாக வெளிக்கொண்டுவர வேண்டும். ஆளும் அதிமுக அரசு இவ்விசயத்தில்,
பெருமளவில் ஊழல் புரிந்திருக்கிறது. ஆளுநரே குற்றம் சாட்டுமளவிற்கு உள்ள
இந்த ஊழலை மக்கள் மத்தியில் என்ன நடந்தது என்ற உண்மையை சொல்ல வேண்டும்
என்றும் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment