நாஞ்சில் நாடன் சிறந்த சிறுகதை
எழுத்தாளர். அவரின் சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுதி சாகித்திய
அகாதமியின் விருது பெற்றுள்ளது. இவரின் எழுத்துக்களில் தன் அனுபவக்கூறு
மிகுந்து காணப்படுகிறது. இவரின் எழுத்துப் பழக்கம், இவரின் நடவடிக்கைகள்
ஆகியவை கும்பமுனி என்ற பாத்திரத்தின் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. பல
கதைகளில் கும்பமுனி என்ற கதாபாத்திரம் இடம்பெறுகிறது. இப்பாத்திரத்திற்குத்
துணைப் பாத்திரமாக கண்ணுப்பிள்ளை என்ற பாத்திரமும் அமைகின்றது.
மனைவியின்றித் தனிக்கட்டையாக வாழ்ந்து
வரும் கும்பமுனிக்கு, கண்ணுப்பிள்ளைதான், தேநீர், உணவு போன்றவற்றைத்
தயாரித்துத் தரும் பணியாளர் ஆவார். இவர் காலை முதல் இரவு வரை
கும்பமுனியுடன் வாழ்ந்துவிட்டுப் பின் தன் இல்லம் திரும்பி, அதன் பிறகு
நாளைக் காலை வருவது என்று பணி செய்பவர். இவர் அடிக்கடி ஊர் நடப்புகள்
பற்றியும், கும்பமுனியின் நடவடிக்கைகள் பற்றியும் விமர்சனப்படுத்தும்
விமர்சனகர்த்தாவாகக் கதைகளில் காட்டப்பெறுகிறார். இவரின்
விமர்சனங்களுக்குப் பதில் தருபவராக கும்பமுனி படைக்கப்பெற்றுள்ளார். இவர்
இருவரது உரையாடலில் எள்ளலும், நகைச்சுவையும், எரிச்சலும், இயலாமையும்
தொனிக்கும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment