எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறென்பது
எட்டாவதாகும். புறநானூறு என்பது கடவுள்வாழ்த்துச் செய்யுள் முதலிய 400
அகவற்பாக்களை உடையது. பண்டைய காலத்தில் 400 பாடல்களைக் கொண்ட ஒரு தொகை
நூலாக இதனைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் யாரென்று அறிய இயலவில்லை.
உ.வே.சாமிநாத ஐயர்:
புறநானூற்றுப் பாடல்களின் முதற்பதிப்பு
1894 இல் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களால் அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 1923, 1935, 1950, 1956, 1962- ஆண்டுகளிலும்
மறுபதிப்புக்களாக மொத்தம் ஆறு பதிப்புகள் அவராலும் அவரது குடும்பத்தாராலும்
வெளிவந்துள்ளன. தொடர்ந்து பின்னர் பல பதிப்புகளும் இன்றுவரை வந்துள்ளன.
பற்பல ஓலைச் சுவடிகளைப் படித்து, அவற்றைக் கையெழுத்துப் படியாக உருவாக்கி,
பாட வேறுபாடுகளைக் கவனத்தில் கொண்டு, அவற்றைப் பல பிரதிகளுடனும் ஒப்பிட்டு
சீர்தூக்கிப் பார்த்துச் செப்பனிட்டு, சரியான வரிகளைக் கண்டறிந்து அச்சுப்
பதிப்பாக வெளியிட்ட உ.வே.சா அவர்களின் பணியைப் போற்றாத தமிழர் இருக்க
வழியில்லை. முதல் மூன்று பதிப்புகள் உ.வே.சா அவர்களாலும், நான்காவது
பதிப்பு 1950 அவர் மகனாலும், பின்னர் வெளியான பதிப்பு பேரன் எழுதிய
முகவுரையுடனும் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment