Tuesday, 15 September 2015

எத்தனையோ மருந்துகள் சாப்பிட்டும் ஏன் சிலருக்கு ஆஸ்துமா குணமாவதில்லை?

aasthumaa1
‘ஆஸ்துமா’ என்ற பெயர்தான் அனைவருக்கும் அறிமுகமாகியிருக்கிறது. ஆனால் இதற்கு சித்த மருத்துவத்தில் ‘இரைப்பு நோய்’ என்று பெயர்.
பொதுவாக இந்த நோயாளிகள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டே இருப்பதை பார்த்திருப்பீர்கள். உங்கள் உறவினரோ நண்பரோ அல்லது நீங்களோ கூட அப்படிப்பட்டவராக இருக்கலாம். சிலர் இப்படி பல மருந்துகள் எடுத்துப் பார்த்து சலித்துப்போய் “இப்போதெல்லாம் நான் ஆஸ்துமாவுக்கு மருந்து எதுவும் எடுப்பதில்லை. மூச்சிரைப்பு வந்தால் Inhaler அடித்துக் கொள்கிறேன்” என்பதோடு முடித்துக்கொள்கிறார்கள்.
ஏன் இவர்களுக்கு இந்நோய் முற்றிலும் குணமாவதில்லை.
இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
  1. சரியான மருத்துவமுறையை தேர்வு செய்யாதது. முழுமையான மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் நிவாரணம் மட்டும் எடுத்துக் கொள்வது.
  2. சரியான நோய் கணிப்பு செய்யாமல் சிகிச்சை எடுத்துக் கொள்வது.
  3. போதுமான கால அளவு மருந்துகள் எடுத்துக் கொள்ளாதது.

இதை விரிவாக பார்ப்பதற்கு முன் இரைப்பு நோய் பற்றி சுருக்கமாக பார்ப்போமா.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

தற்காலக் கல்வி முறை பகுதி – 4

வாழ்க்கைக்கும் வகுப்பறைக்குமான இடைவெளி சில காரணிகள்
ஒரு காலத்தில் படித்துப் பட்டம் பெறுவது மிக உயர்வாகக் கருதப்பட்டது. ஆனால் அப்பட்டங்கள் இன்று தேர்வில் வெற்றி பெற்றதற்கான ஒரு அடையாளச்சீட்டாக மட்டுமே உள்ளது. கல்வி ஒரு விபத்தாகவும், பல்கலைக்கழகம் தரும் பட்டம் அதற்கான நிவாரணமாகவும் மாறிப்போய்விட்டது.
vaalkkaikkum vagupparaikkum1
பிஎச்.டி உள்ளிட்ட  உயர்ந்த   பட்டங்களைப்   பெற்ற   மாணவர்கள்   கூடதன்னம்பிக்கை இழந்தவர்களாக, வாழ்வைச் சுமையாகக் கருதுவோராக மாறிப் போயுள்ளனர். நாடு விடுதலை பெற்றுப்பல்லாண்டு ஆகியும் வறுமை, அறியாமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சிக்கல்கள்நீங்காததால், நாட்டின் நிலை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. கல்வியைப்பெற்ற மாணவர்கள் ‘வேலையில்லாப் பட்டதாரி’ என்ற புதிய பட்டத்தைத் தவிரவேறொரு பயனையும் பெறுவதில்லை. இவர்களின் சிக்கலை அரசாங்கமோ, அரசியல்வாதிகளோ கண்டு கொள்வதில்லை. இந்தப் பல்கலைக்கழகங்கள் வேலையில்லாதவர்களைஉற்பத்தி செய்யும்/தொழிற்சாலைகளா? என்று சாடுகிறார் ஒரு கவிஞர். கல்வியின் நோக்கம், கல்வியைக் கற்பவர் தமது வாழ்நாளெல்லாம் தமக்குத் தேவையான கல்வியைத் தொடர்ந்து சுயமாகக் கற்றிடும் திறமையுடையவர்களை உருவாக்குவதாக இருக்கவேண்டும்.
vaalkkaikkum vagupparaikkum2
நல்ல பாடத்திட்டம், உயரிய ஆசிரியர்களின் வழி மாணவர்களைச் சென்றடைய வேண்டும். ஆனால் நடப்பியல் கல்வி, வியாபாரமாகிவிட்ட சூழலில், மாணவர்களையும் பெற்றோர்களையும் கடனாளியாக்குகிறதேயன்றி சிந்தித்து உழைப்பால் உயரும் முதலாளியாக்குவதில்லை. ஒருவித  குற்ற உணர்வை, தாழ்வுமனப்பான்மையைத்தான் மாணவர்களிடம் தற்போதைய கல்வி  முறை      ஏற்படுத்துகிறது.      ‘ஒவ்வொரு    தலைமுறையும்    அதற்கு     முந்தைய தலைமுறையைக் காட்டிலும் சீர்கேடு அடைகிறது’ என்பது சீனப் பழமொழி.

சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. எனினும் கல்விக்காக ஏங்கும் குழந்தைகள், பள்ளி செல்ல முடியா வறுமையில் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள், உயர்கல்வி கற்க முடியா மாணவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். இன்று தனியார் மயமாகி வரும் சூழலில் ஆங்கிலப்பள்ளிகளின் மோகத்தில் சொத்தை விற்றாவது கல்வி கற்கச் செய்ய வேண்டுமென்று நடுத்தர வர்க்கம் முயல்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அரசுப் பள்ளிகளும் அரசுக் கல்லூரிகளுமே. தனியார் பள்ளிகளின் பெருக்கத்தில் இழுத்து மூடிவிடக்கூடிய நிலையிலுள்ள அரசு பள்ளிகளும், அரசு பொறியியல் கல்லூரிகளும் பெருகி வருவது கண்கூடு. இதனால் அரசு பள்ளிகளில், கல்லூரிகளில் படிப்பதென்பதுகூட கனவாகி உள்ள கீழ்மட்ட ஏழைகளின் பிள்ளைகளுக்கு இனி அந்த கதவும் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் வெகு தொலைவில் இல்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday, 14 September 2015

தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் உறுப்பினர்களின் நேர்காணல்

tamil menporul2
கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில்: வணக்கம், என் பெயர் சிபி, சொந்த ஊர் இராமநாதபுரம் அருகில் இருக்கிற RS மங்கலம் வரவனு என்கிற கிராமத்தில் இருக்கிறேன். நான் படித்தது என்று பார்த்தால் நான்கைந்து ஊர்களில் படித்திருக்கிறேன். முதலில் சென்னையில் ஆல்ஃபா மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்திருக்கிறேன், அடுத்து தூத்துக்குடியில் ஸ்பிக் நகர் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் படித்தேன். ஆர்மி பள்ளி என்று சைனிக் பள்ளி அமராவதி நகரில் 3 வருடங்கள் படித்தேன். அதற்கடுத்து 11வது மற்றும் 12வது சென் சேவியர்ஸில் படித்தேன். எங்களது குடும்ப சூழ்நிலையினால் பல ஊர்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். எனவே நான் நிறைய பள்ளியில் படிக்கவேண்டியிருந்தது. கல்லூரி வந்து B.E. Computer Science சென்னை கேளம்பாக்கத்தில் இருக்கிற ஹிந்துஸ்தான் கல்லூரியில் படித்தேன். அதை முடித்துவிட்டு இரண்டு வருடங்கள் வேலை பார்த்தேன். அந்த வேலை பார்த்தப்பிறகு திருப்பி UPSC (Union Publice Service Commission) என்ற தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தேன். அதற்கு நடுவில் M.E. Computer Science படித்து முடித்தேன். அதன்பிறகு ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்று சொல்லலாம். அதே மாதிரி தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையுடன் என் வாழ்க்கை என்று பார்த்தால் B.E யை 2008 ல் முடிக்கும் பொழுது, ஒரு சில நண்பர்கள் இணைந்து தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை என்று ஆரம்பிக்கலாமா என்று யோசித்தோம். அதன் பிறகு 2015 வரையிலும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கேள்வி: தமிழில் மென்பொருள் உருவாக்கவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?

tamil menporul1
பதில்: முதலில் தமிழ் மென்பொருள் உருவாக்கவேண்டும் என்ற நோக்கோடு இதை ஆரம்பிக்க வில்லை. நாங்கள் ஆரம்பித்தது அறிவு தனிவுடைமையாக இருக்கக்கூடாது, அறிவு பொதுவுடைமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் 2008-ல் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையை ஆரம்பிக்கலாம் என்று யோசித்தோம். அப்படி நாங்கள் செய்துகொண்டிருக்கும் பொழுது எங்களுக்கு என்ன புரிய ஆரம்பித்தது என்றால், கணினி அறிவியல் மட்டுமே ஒரு பெரிய தடை கிடையாது, ஆனால் தமிழில் கணினி அறிவியல் இல்லாததுதான் கணினியோ, அது சார்ந்த தொழில் நுட்பங்களோ மேலே போவதற்கு ஒரு பெரிய தடையாக இருக்கிறது என்பது மாதிரி பார்த்தோம். மிகவும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், ATM Machine ல் ஆங்கிலம் இருக்கிற வரைக்கும் அது பெரிய அளவில் போகவில்லை. அதன் பிறகு எப்பொழுது தமிழில் வந்ததோ அதன் பிறகுதான், ATM பயன்பாடு என்பது பெரிய அளவில் உருவாகியது. இதை புரிந்துகொண்டதற்குப் பிறகுதான் நாங்கள் அனைவரும் சேர்ந்து தமிழில் மிக முக்கியமான சில மென்பொருட்கள் உருவாக்கவேண்டும் என்பது. இந்த விடயத்தை நாங்கள் ஆரம்பித்தது அல்ல, இதற்கு முன்பு பலபேர் செய்திருக்கிறார்கள்.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Sunday, 13 September 2015

இந்தி எதிர்ப்பால் தமிழகம் இழந்தது என்ன? – மீள்பதிவு

ஏப்ரல் 15, 2012 அன்று வெளிவந்த இக்கட்டுரை மீள்பதிவு செய்யப்படுகிறது.
சமீப காலங்களில் சென்னை விமான நிலையத்திற்குச் சென்றிருப்பவர்கள்  மேலே படத்தில் இருக்கும் அறிவிப்புப் பலகையை பார்த்திருப்பீர்கள். இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து ஏறத்தாழ  ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்ட  நிலையில் நடுவண் அரசு  இந்தியை தமிழகத்தில் மென்மையாக பரப்புரை செய்வதைத்தான் இந்தப் பதாகை உணர்த்துகிறது. எத்தனை ஆண்டுகளாயினும் இந்தியை ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்பதில் நடுவண் அரசு உறுதியாகத்தான் இருக்கின்றது. இந்தி ஆட்சி மொழியாக்கப்படுவதை தமிழர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தனர் அன்று. இன்று?
இன்று இந்தி எதிர்ப்பைப் பற்றி பேசும்பொழுது தமிழர்களில் பெரும்பாலானோர்  கூறுவது “ஆமாம், இந்தியைப் படிக்காதே என்று ஊருக்கு சொல்லிவிட்டு, தன் வாரிசுகளை எல்லாம் இந்தியைப் படிக்க வைத்து  நடுவண் அரசில் அமைச்சர்களாக்கி விட்டனர் அரசியல்வாதிகள், நாம்தான் அவர்கள் பேச்சைக் கேட்டு மோசம் போனோம்!”. மக்களின் இந்த விரக்தியில் உண்மையில்லாமல் இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியை கடுமையாக எதிர்த்த திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) பின்னர் படிப்படியாக இந்தியை ஏற்றுக் கொண்டுவிட்டது. தமிழகத்தில் இந்தி பேசுபவர்களின் வாக்குகளைக் கவர சென்னையிலேயே இந்தியில் பதாகைகள் வைக்கும் அளவிற்கு அவர்களின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

தி.மு.க.வின் இந்த மாற்றத்தால் மக்கள் அடைந்திருக்கும் விரக்தியில் தமிழர்கள் இந்தியை இன்று எளிதாக ஏற்றுக்கொள்வார்கள் என்பது போன்ற தோற்றம் உருவாகியிருக்கிறது. கடந்த கால இந்தி எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தி.மு.க.வை மட்டுமே சார்ந்திருந்திருந்தால், இன்றைய சூழ்நிலையில் தி.மு.க.வுடன் சேர்ந்து இந்தி எதிர்ப்பும் பலவீனமடைந்த நிலையில்தான் இருக்கவேண்டும். ஆனால் வரலாற்றைப் பார்க்கையில், இந்தி எதிர்ப்பு போராட்டம் தி.மு.க.வின் கட்சிப் போராட்டம் போன்றல்லாமல் ஓட்டுமொத்த தமிழினத்தின் போராட்டமாகத்தான் இருந்திருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Wednesday, 9 September 2015

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-5

pulithevar FI
புலித்தேவர் அவர்களை, அவர்காலத்து புலவர்கள் பலர் புகழ்ந்து பல பாடல்களை பாடியுள்ளனர். அந்தப் பாடல்களை சில இன்றும் நெல்கட்டான் செவ்வல் பகுதி மக்களில் சிலர் பாடுவதை நாம் கேட்கலாம். புலித்தேவரின் வீரத்தினையும் பல்வேறு பாடல்களில் புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல்கள் மட்டும் இல்லாமல், கிராமங்களில் பாடும் நாட்டுப்புறப்பாடல்களின் மூலமும், திருவிழாக்களின் போது நடைபெறும் நாடகம், கலைநிகழ்ச்சி, தெருக்கூத்துகளிலும் புலித்தேவரின் வீரத்தினையும், அவர் ஆட்சி செய்ததையும், அவர் வெள்ளையனை புறமுதுகிட்டு ஓட ஓட விரட்டி அடித்ததையும், அவர் மக்களுக்கு செய்த நல்லாட்சி பற்றியும் இந்த திருநெல்வேலி சீமையில் இன்றும் பல கிராமங்களில் நாம் காண முடியும்.
புலித்தேவரின் தோற்றத்தினை புலவர்கள் பலர் அவர்களின் பாடல்களில் கூறியுள்ளதிலிருந்து சில,
புலித்தேவரின் தோல்கள் தேக்கு மரம் போன்றது.
அவரது முகம் அதிகாலை பொன் ஒளி வீசும் ஞாயிறு(சூரியன்) போன்று ஒளிரும் தெய்வீக முகம்.
அவர் நடந்தால் அதிரும் எதிரியின் பூமி.
கண்கள் சிவந்தால் உருளும் எதிரியின் தலைகள்.
அவரின் வால் வீச்சு புயல்காற்றை போன்று இருக்கும்.
அவரது கைகள் இரண்டும் மிக நீண்ட கைகளாக இருக்கும் உதவி என்று தஞ்சம் அடைந்தவர்களுக்கு வள்ளலாக இருப்பார்.
இவர் வீரம் புலியின் வீரம் போன்று இருக்கும்.
இவரது குரல் கேட்டதும் இடி ஓசை கேட்ட நாகம் ஓடுவது போல் எதிரிகள் ஓடுவர், நடுங்குவர்.
என்று புலவர்கள் இதுவரை வர்ணித்துள்ளனர்.

இவர் ஆட்சி செய்த காலத்தில் மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday, 8 September 2015

சித்த மருத்துவமனைகள் எங்கே இருக்கின்றன? நிலவிலா, செவ்வாய் கிரகத்திலா?

sidhdha 3
“டாக்டர்… சென்னை அரும்பாக்கம் தவிர வேறு எங்கேயும் சித்த மருத்துவமனைகள் கிடையாதா…?“ இப்படி கேட்டார் மத்திய அரசு பணியில் இருக்கும் ஒருவர். ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன். அரசு சித்த மருத்துவமனைகள் பற்றிய மக்களுக்கான அறிமுகம் அவ்வளவுதான்.
இந்த கட்டுரையில் நிறுவனமயமாக்கப்பட்ட சித்த மருத்துவமனைகள் பற்றியும், அதன் வரலாற்றையும் சுருக்கமாக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
எல்லாத் துறைகளிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மிடத்தில் அறிவு இருந்து வந்திருந்தாலும், அறிவைக்கூட தனியுடைமையாகவே கருதி வந்திருக்கிறோம். யாரோ ஒரு வள்ளுவரையும், ஒரு கணியன் பூங்குன்றனாரையும், ஒரு தேரையரையும், ஒரு யூகியையும் தவிர பெரும்பான்மையானவர்கள் சிறிய வட்டம் போட்டு அதற்குள்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
நாளந்தா பல்கலைக்கழகம் போன்று விரல்விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள் தோன்றியிருந்தும், மூடநம்பிக்கை என்பதையே மூலதனமாகக் கொண்ட பெரும்பான்மை வாதம், அறிவை ஆடிமாதத்தில் ஆற்றில் கொட்டிவிட்டது. இதற்கு உலகை சுற்றி வந்த பல பயணிகள் நம்மைப்பற்றி கூறியவைகள் சாட்சிகளாக வரலாற்றில் இருக்கின்றன.

எது எப்படியோ, வெள்ளைக்காரன் வந்தானோ இல்லையோ நிர்வாகம் வந்தது. சித்த மருத்துவம் பிழைத்தது. நான் இப்படிச் சொல்வது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday, 7 September 2015

உலகெங்கிலும் அகதிகளின் அவலநிலை

THAILAND-SEASIA-MIGRANTS
ஏதிலி அல்லது அகதி என்ற சொற்களோ, புலம் பெயர்தல் என்ற கருத்தோ தமிழருக்குப் புதிதல்ல. ஈழத்தமிழர் வாழ்க்கைப் போராட்டத்தையும், அவர்களில் சிலர் தமிழக அகதிகள் முகாம்களில் சிறைக்கைதிகள் போன்ற கொடுமைகளை எதிர்கொள்ளும் வாழ்வையும் அறியாதவர் யார்? அகதி என்றால் வாழ்வதற்கு அச்சம் தரக்கூடிய சூழலில் இருந்து தப்பிச் சென்று வேறொரு நாட்டில் புகலிடம் பெறுபவர் என்றும்; பிழைப்பு தேடி வேறு நாட்டிற்குச் சென்று வாழ்வது புலம் பெயர்தல் என்றும் அடிப்படையில் விளக்கங்கள் மட்டுமே வேறுபடுகின்றன.
இனஅழிப்பு, வன்முறை ஆகியவற்றில் இருந்து உயிர் தப்பி ஓடுபவர்களையும்; பஞ்சம் பிழைக்கச் செல்பவர்களையும் இவ்வாறாக சட்டப்படி ஒரு நாட்டில் குடிபுகுவதை வகைப்படுத்துவது வரை மட்டுமே அடிப்படையில் வேறுபாடு. எம்முறையில் புகலிடம் தேடிச் சென்றாலும், புலம்பெயர்பவர் வாழ்வு ஆரம்பக் காலங்களில் போராட்டம் மிக்கதாகவே இருக்கும். வேரடி மண்ணுடன் பிடுங்கி வேறொரு இடத்தில் நடப்பட்ட செடிகள் உயிர்பிழைக்கத் தத்தளிக்கும் நிலையுடன் ஒப்பிட வேண்டிய வாழ்வு அது. இந்த நிலையில் சட்டத்திற்குப் புறம்பாக ஒரு நாட்டிற்குள் குடிபுக எண்ணுபவர்களும், சட்டப்படி அனுமதி கோரி அடுத்த நாடுகளை அண்டுபவர்களின் வாழ்வும் துயரங்கள் பல நிறைந்தது. இந்தப் போராட்டத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

agadhigal1
இன்றைய நாளில் உலக அளவில் சுமார் ஆறு கோடி மக்கள் அகதிகளாக இருக்கின்றனர். மனிதநேய அடிப்படையில் அகதிகளுக்குப் புகலிடம் கொடுக்கும் நாடுகளும் பொருளாதாரச் சுமையை சுமக்கின்றன. பாகிஸ்தான் பிரிவதற்குக் காரணமாக இருந்த வன்முறையில் இருந்து தப்பிய கிழக்குப்பாக்கிஸ்தான் அகதிகள் அலையலையாக 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.