வாழ்க்கைக்கும் வகுப்பறைக்குமான இடைவெளி – சில காரணிகள்
ஒரு காலத்தில் படித்துப் பட்டம் பெறுவது
மிக உயர்வாகக் கருதப்பட்டது. ஆனால் அப்பட்டங்கள் இன்று தேர்வில் வெற்றி
பெற்றதற்கான ஒரு அடையாளச்சீட்டாக மட்டுமே உள்ளது. கல்வி ஒரு விபத்தாகவும்,
பல்கலைக்கழகம் தரும் பட்டம் அதற்கான நிவாரணமாகவும் மாறிப்போய்விட்டது.
பிஎச்.டி
உள்ளிட்ட உயர்ந்த பட்டங்களைப் பெற்ற மாணவர்கள் கூடதன்னம்பிக்கை
இழந்தவர்களாக, வாழ்வைச் சுமையாகக் கருதுவோராக மாறிப் போயுள்ளனர். நாடு
விடுதலை பெற்றுப்பல்லாண்டு ஆகியும் வறுமை, அறியாமை, வேலையில்லாத்
திண்டாட்டம் போன்ற சிக்கல்கள்நீங்காததால், நாட்டின் நிலை ஆரம்பித்த
இடத்திலேயே நிற்கிறது. கல்வியைப்பெற்ற மாணவர்கள் ‘வேலையில்லாப் பட்டதாரி’
என்ற புதிய பட்டத்தைத் தவிரவேறொரு பயனையும் பெறுவதில்லை. இவர்களின் சிக்கலை
அரசாங்கமோ, அரசியல்வாதிகளோ கண்டு கொள்வதில்லை. இந்தப் பல்கலைக்கழகங்கள்
வேலையில்லாதவர்களைஉற்பத்தி செய்யும்/தொழிற்சாலைகளா? என்று சாடுகிறார் ஒரு
கவிஞர். கல்வியின் நோக்கம், கல்வியைக் கற்பவர் தமது வாழ்நாளெல்லாம்
தமக்குத் தேவையான கல்வியைத் தொடர்ந்து சுயமாகக் கற்றிடும் திறமையுடையவர்களை
உருவாக்குவதாக இருக்கவேண்டும்.
நல்ல
பாடத்திட்டம், உயரிய ஆசிரியர்களின் வழி மாணவர்களைச் சென்றடைய வேண்டும்.
ஆனால் நடப்பியல் கல்வி, வியாபாரமாகிவிட்ட சூழலில், மாணவர்களையும்
பெற்றோர்களையும் கடனாளியாக்குகிறதேயன்றி சிந்தித்து உழைப்பால் உயரும்
முதலாளியாக்குவதில்லை. ஒருவித குற்ற உணர்வை, தாழ்வுமனப்பான்மையைத்தான்
மாணவர்களிடம் தற்போதைய கல்வி முறை ஏற்படுத்துகிறது. ‘ஒவ்வொரு
தலைமுறையும் அதற்கு முந்தைய தலைமுறையைக் காட்டிலும் சீர்கேடு
அடைகிறது’ என்பது சீனப் பழமொழி.
சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளுக்கும் மேலாகி
விட்டது. எனினும் கல்விக்காக ஏங்கும் குழந்தைகள், பள்ளி செல்ல முடியா
வறுமையில் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள், உயர்கல்வி கற்க முடியா மாணவர்கள்
இருக்கத்தானே செய்கிறார்கள். இன்று தனியார் மயமாகி வரும் சூழலில்
ஆங்கிலப்பள்ளிகளின் மோகத்தில் சொத்தை விற்றாவது கல்வி கற்கச் செய்ய
வேண்டுமென்று நடுத்தர வர்க்கம் முயல்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அரசுப்
பள்ளிகளும் அரசுக் கல்லூரிகளுமே. தனியார் பள்ளிகளின் பெருக்கத்தில் இழுத்து
மூடிவிடக்கூடிய நிலையிலுள்ள அரசு பள்ளிகளும், அரசு பொறியியல் கல்லூரிகளும்
பெருகி வருவது கண்கூடு. இதனால் அரசு பள்ளிகளில், கல்லூரிகளில்
படிப்பதென்பதுகூட கனவாகி உள்ள கீழ்மட்ட ஏழைகளின் பிள்ளைகளுக்கு இனி அந்த
கதவும் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் வெகு தொலைவில் இல்லை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment