ஏதிலி
அல்லது அகதி என்ற சொற்களோ, புலம் பெயர்தல் என்ற கருத்தோ தமிழருக்குப்
புதிதல்ல. ஈழத்தமிழர் வாழ்க்கைப் போராட்டத்தையும், அவர்களில் சிலர் தமிழக
அகதிகள் முகாம்களில் சிறைக்கைதிகள் போன்ற கொடுமைகளை எதிர்கொள்ளும்
வாழ்வையும் அறியாதவர் யார்? அகதி என்றால் வாழ்வதற்கு அச்சம் தரக்கூடிய
சூழலில் இருந்து தப்பிச் சென்று வேறொரு நாட்டில் புகலிடம் பெறுபவர்
என்றும்; பிழைப்பு தேடி வேறு நாட்டிற்குச் சென்று வாழ்வது புலம் பெயர்தல்
என்றும் அடிப்படையில் விளக்கங்கள் மட்டுமே வேறுபடுகின்றன.
இனஅழிப்பு, வன்முறை ஆகியவற்றில் இருந்து
உயிர் தப்பி ஓடுபவர்களையும்; பஞ்சம் பிழைக்கச் செல்பவர்களையும் இவ்வாறாக
சட்டப்படி ஒரு நாட்டில் குடிபுகுவதை வகைப்படுத்துவது வரை மட்டுமே
அடிப்படையில் வேறுபாடு. எம்முறையில் புகலிடம் தேடிச் சென்றாலும்,
புலம்பெயர்பவர் வாழ்வு ஆரம்பக் காலங்களில் போராட்டம் மிக்கதாகவே இருக்கும்.
வேரடி மண்ணுடன் பிடுங்கி வேறொரு இடத்தில் நடப்பட்ட செடிகள் உயிர்பிழைக்கத்
தத்தளிக்கும் நிலையுடன் ஒப்பிட வேண்டிய வாழ்வு அது. இந்த நிலையில்
சட்டத்திற்குப் புறம்பாக ஒரு நாட்டிற்குள் குடிபுக எண்ணுபவர்களும்,
சட்டப்படி அனுமதி கோரி அடுத்த நாடுகளை அண்டுபவர்களின் வாழ்வும் துயரங்கள்
பல நிறைந்தது. இந்தப் போராட்டத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒவ்வொரு
ஆண்டும் அதிகரித்து வருகிறது.
இன்றைய
நாளில் உலக அளவில் சுமார் ஆறு கோடி மக்கள் அகதிகளாக இருக்கின்றனர்.
மனிதநேய அடிப்படையில் அகதிகளுக்குப் புகலிடம் கொடுக்கும் நாடுகளும்
பொருளாதாரச் சுமையை சுமக்கின்றன. பாகிஸ்தான் பிரிவதற்குக் காரணமாக இருந்த
வன்முறையில் இருந்து தப்பிய கிழக்குப்பாக்கிஸ்தான் அகதிகள் அலையலையாக
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment