கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில்: வணக்கம், என்
பெயர் சிபி, சொந்த ஊர் இராமநாதபுரம் அருகில் இருக்கிற RS மங்கலம் வரவனு
என்கிற கிராமத்தில் இருக்கிறேன். நான் படித்தது என்று பார்த்தால்
நான்கைந்து ஊர்களில் படித்திருக்கிறேன். முதலில் சென்னையில் ஆல்ஃபா
மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்திருக்கிறேன், அடுத்து தூத்துக்குடியில்
ஸ்பிக் நகர் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் படித்தேன். ஆர்மி பள்ளி என்று
சைனிக் பள்ளி அமராவதி நகரில் 3 வருடங்கள் படித்தேன். அதற்கடுத்து 11வது
மற்றும் 12வது சென் சேவியர்ஸில் படித்தேன். எங்களது குடும்ப சூழ்நிலையினால்
பல ஊர்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். எனவே நான் நிறைய பள்ளியில்
படிக்கவேண்டியிருந்தது. கல்லூரி வந்து B.E. Computer Science சென்னை
கேளம்பாக்கத்தில் இருக்கிற ஹிந்துஸ்தான் கல்லூரியில் படித்தேன். அதை
முடித்துவிட்டு இரண்டு வருடங்கள் வேலை பார்த்தேன். அந்த வேலை
பார்த்தப்பிறகு திருப்பி UPSC (Union Publice Service Commission) என்ற
தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தேன். அதற்கு நடுவில் M.E. Computer
Science படித்து முடித்தேன். அதன்பிறகு ஆசிரியராக வேலை
பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்று
சொல்லலாம். அதே மாதிரி தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையுடன் என்
வாழ்க்கை என்று பார்த்தால் B.E யை 2008 ல் முடிக்கும் பொழுது, ஒரு சில
நண்பர்கள் இணைந்து தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை என்று
ஆரம்பிக்கலாமா என்று யோசித்தோம். அதன் பிறகு 2015 வரையிலும் அது தொடர்ந்து
கொண்டிருக்கிறது.
கேள்வி: தமிழில் மென்பொருள் உருவாக்கவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?
பதில்:
முதலில் தமிழ் மென்பொருள் உருவாக்கவேண்டும் என்ற நோக்கோடு இதை ஆரம்பிக்க
வில்லை. நாங்கள் ஆரம்பித்தது அறிவு தனிவுடைமையாக இருக்கக்கூடாது, அறிவு
பொதுவுடைமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் 2008-ல் தமிழ்நாடு
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையை ஆரம்பிக்கலாம் என்று யோசித்தோம். அப்படி
நாங்கள் செய்துகொண்டிருக்கும் பொழுது எங்களுக்கு என்ன புரிய ஆரம்பித்தது
என்றால், கணினி அறிவியல் மட்டுமே ஒரு பெரிய தடை கிடையாது, ஆனால் தமிழில்
கணினி அறிவியல் இல்லாததுதான் கணினியோ, அது சார்ந்த தொழில் நுட்பங்களோ மேலே
போவதற்கு ஒரு பெரிய தடையாக இருக்கிறது என்பது மாதிரி பார்த்தோம். மிகவும்
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், ATM Machine ல் ஆங்கிலம் இருக்கிற
வரைக்கும் அது பெரிய அளவில் போகவில்லை. அதன் பிறகு எப்பொழுது தமிழில்
வந்ததோ அதன் பிறகுதான், ATM பயன்பாடு என்பது பெரிய அளவில் உருவாகியது. இதை
புரிந்துகொண்டதற்குப் பிறகுதான் நாங்கள் அனைவரும் சேர்ந்து தமிழில் மிக
முக்கியமான சில மென்பொருட்கள் உருவாக்கவேண்டும் என்பது. இந்த விடயத்தை
நாங்கள் ஆரம்பித்தது அல்ல, இதற்கு முன்பு பலபேர் செய்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment