Sunday, 13 March 2016

குறையில்லாத கிராமங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் தலைவர் குத்தம்பாக்கம் இளங்கோ அவர்களின் நேர்காணல்- பகுதி-2


kuththambakkam Elango1
1947ல் சுதந்திரம் அடைந்த அன்று இந்தியாவில் 1ரூபாய் 17 பைசா சேர்ந்தது 1 டாலர். 1948ல் 1ரூபாய் 13பைசா சேர்ந்தது 1 பவுண்டு. அன்றைக்கு இந்த நாட்டினுடைய பொருளாதாரம் யார் கையிலிருந்தது, விவசாயி கையிலிருந்தது. விவசாயம்தான் நாட்டைக் காப்பாற்றிக்கொண்டிருந்தது. 60 வருடத்தில் 66 கொடுத்து 1 டாலர் வாங்குகிறேன். நீ என்னுடைய பொருளாதாரத்தையே வீழ்ச்சி செய்துவிட்டாய், என்னையையும் கேவலமாக்கி கைகட்டி நிற்க வைக்கிறாய். நான் பருத்தி விளைய வைக்கிறேன், நான் ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும், என்னுடைய பருத்தி இல்லை என்றால் துணி போட முடியாது, என்னுடைய தக்காளி இல்லை என்றால் சென்னையில் வாழ முடியாது. என்னுடைய கத்தரிக்காய் இல்லையென்றால் டெல்லியில் வாழ முடியாது.
kuththambakkam nerkaanal1
திட்டமிட்டு விவசாயிகளையும், கிராமத்து மக்களையும் உங்களுடைய பக்கம் இழுத்து நம்ப வைத்துவிட்டாய். என்னுடைய நம்பிக்கையை நான் இழந்துவிட்டு பயிர் செய்துவிட்டேன், என் வீட்டில் சோறு இருக்கிறது, பால் இருக்கிறது, பழம் இருக்கிறது, எல்லாமே இருக்கிறது. நான் மிகவும் கூனிக் குறுகி மிகவும் நொந்துபோன தாழ்வானவனாக நான் நினைத்து வாழ்கிறேன். உன்னிடம் ஒன்றும் கிடையாது, தமிழைக்கூட மாற்றிப் பேச கற்றுக்கொண்டாய். ஆனால் நீ நினைக்கிறாய் அங்கு உட்கார்ந்துகொண்டு கால்மேல் காலைப்போட்டு விவசாயிகள் பாவம் என்று நினைக்கிறாய். இங்கு எங்களுடைய தேங்காய் இல்லை என்றால் நீ வாழ முடியாது. அந்தத் தேங்காயைக் கொண்டுவந்து முட்டாள்கள் தெருவில் உடைக்கிறோம். இவையனைத்தையும் எப்படி மாற்றுவது. இது பெரிய வேலை ஒன்றும் கிடையாது, ராக்கெட் விடுவதோடு ஒப்பிடும்பொழுது மிகச் சிறிய வேலை. 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 10 March 2016

எப்படியும் நாளை எழுதிட வேண்டும் !!(கவிதை)


eppadiyum naalai1.jpg


கடிகார மணி அடிக்கும் முன்
விறு விறு என்று எழுந்தேன்
கண்கள் கசக்கிய படி
மணியை பார்த்தேன்
ஆறடிக்க இன்னும் 15
நிமிடங்கள்
மனம் துயில் கொள்ளவே
விரும்பினாலும்
கால்கள் அடுக்களையை
நோக்கியே நடந்தன
சென்ற மாதம் படிக்க
ஆரம்பித்த நாவலை

எப்படியும் இந்த வாரமாவது

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=19888

கபீர்தாசரின் பாடல்கள் வழங்கும் இறைச்சிந்தனைகள் – ஒரு பார்வை


kabeer dasar1
கபீர்தாசர் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், இவர் ‘சந்த் கபீர்’ எனவும் அழைக்கப்படுவார். பொதுவாக, கபீர்தாசர் ஓர் இசுலாமிய நெசவாளர் குடும்பத்தில் வளர்ந்தவரென்றும், பக்தி இயக்கக் காலத்தில் இராமனந்தர் என்ற குருவினால் ஈர்க்கப்பட்டு இராமரையும் வழிபட்டார், இந்து-முஸ்லீம் ஒற்றுமை இவரது அறிவுரைகளால் மேம்பட்டது என்பதும் வரலாறு. ஆனால் இவரது பிறப்பு மீதும், வாழ்க்கையின் மீதும் எண்ணற்ற தொன்மங்களும் புனையப்பட்டுள்ளன. இந்தியவியல் ஆய்வாளர், வெண்டி டோனிகர் (Indologist, Wendy Doniger), இந்த முயற்சிகள் கபீர்தாசரை ஒரு இந்துவாக உலகின் முன்னிறுத்த உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள் அவை என்றும் கூறுவார். எவ்வித ஆதாரமுமற்ற அப்புனைவுகளில், கபீர்தாசர் ஒரு பிராமணத் தாயாரால் கைவிடப்பட்ட குழந்தை என்றும், இசுலாமிய நெசவாளி ஒருவர் அவரை வளர்த்ததாகவும், இசுலாமியராக வளர்க்கப்பட்ட கபீர்தாசர் பிற்காலத்தில் இராமபக்தராக மாறினார் என்றும், அவரது குடும்பம், மனைவி, மக்கள் பற்றியும் புழங்கிவரும் கதைகள் பற்பல.
கபீர்தாசர் இந்து, இசுலாமியம் ஆகிய இருமதங்களின் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வெறுத்து அவற்றின் மீது கேள்விகளை எழுப்பியவர். கபீர்தாசர் ராம்-ரஹீம் என்ற அடிப்படையில் ஒருவரையும் வேறுபடுத்திப் பார்த்தவர் அல்லர். இவரது சிந்தனைகளின் வெளிப்பாடுகள் இறைவனைப் பற்றிய கருத்துகள், இறைவழிபாட்டைப் பற்றிய கருத்துகள் என யாவும் இந்து-முஸ்லீம் மதக் கோட்பாடுகளை ஒருங்கிணைத்தே வெளிப்பட்டன. அவை இந்துமுஸ்லிம் நல்லுறவை வளர்க்கும் இயக்கமாகவும் விளங்கியது. இவரது பாடல்களில் சில சீக்கிய மதத்தின் ஆதிகிரந்தத்தில் இடம் பெற்றுள்ளன. நெசவாளராக வாழ்ந்து, சமயநல்லுறவிற்கு பெரும்பங்காற்றிய சிறந்த கவிஞரான கபீர்தாசரின் பெயரில் அவரது நினைவைப் போற்றும் வண்ணம் ‘சந்த் கபீர்’ என்ற சிறந்த நெசவாளருக்கான விருதை மத்திய அரசு கடந்த ஐம்பது ஆண்டுகளாக (1965இல் இருந்து) வழங்கி வருகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 9 March 2016

முகப்பருவின் மர்மம்


mugapparu8

முகப்பரு (acnevulgaris):
பொதுவாக பதின் வயதில்(Teenage) கிட்டத்தட்ட எல்லோருக்கும் வரக்கூடிய ஒரு பிரச்சனை முகப்பரு. அதிலும் பதின் வயதின் கடைசி வருடங்களில் இந்தப் பிரச்சனை அதிகமாகவே இருக்கும். அதிலும் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளை விட அதிகமாகக் காணப்படும். ஆனால் சில பெண் பிள்ளைகளுக்கு இதன் தீவிரம் மிக அதிகமாக இருக்கும். சிலருக்கு இலேசாக ஆரம்பித்து சரியாகிவிடும். ஆனால் சிலருக்கு இது தொடர் பிரச்சனையாக இருக்கும்.
mugapparu1

சில பெண்களுக்கு 30 வயதுக்கு மேலும் கூட இது ஒரு பிரச்சனையாக தொடர்வதுண்டு.

காட்சி ஊடகங்களில் (தொலைக்காட்சி, சினிமா) பணியாற்றும் பெண்களுக்கு முகப்பரு பெரிய தொல்லையாக இருந்து மன உளைச்சலைத் தரும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

குறையில்லாத கிராமங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் தலைவர் குத்தம்பாக்கம் இளங்கோ அவர்களின் நேர்காணல்


kuththambakkam Elango1

கேள்வி: உங்களைப் பற்றி கூறுங்கள்?
பதில்: என் பெயர் இளங்கோ, இரசாயனப் பொறியாளர். குத்தம்பாக்கம் என்னுடைய சொந்தஊர், இதுதான் நான் பிறந்து வளர்ந்த ஊர். இந்த கிராமத்தில நான்தான் முதல் பொறியாளரானேன். இந்த குத்தம்பாக்கம் கிராமம் சென்னைக்கு மிக அருகாமையில் இருந்தாலும் பின்தங்கிய கிராமம்தான். மக்கள் ஏழையாக இருந்தார்கள், மதப் பிரச்சனைகள் நிறைய இருந்தது, கள்ளச்சாராயம் காய்ச்சும் பழக்கம் இருந்ததால் குடிகாரர்கள் நிறைய இருந்தார்கள், அதன்காரணமாக வன்முறை நிறைய இருந்தது. நான் இளைஞராக வளரும்பொழுதே இதற்கு ஒரு மாற்று கண்டுபிடிக்க முடியுமா? என்ற சூழ்நிலையில்தான் படித்தேன். வழக்கம்போல் படித்துமுடித்தவுடன் கல்வி வெளியில் அனுப்பிவிடும், இரசாயனப் பொறியாளருக்கு வேலை இங்கு கிடைக்காது, வெளியில்தான் வேலை கிடைத்தது. எனவே வெளியில் சென்று பணம் சம்பாதித்துவிட்டு ஊருக்கு வரும்பொழுதெல்லாம் ஒரு குறை தெரியும். நான் மட்டும் ஏதோ முன்னேறுவதுபோல் தெரிகிறது, நம்முடைய ஊர் அப்படியேதான் இருக்கிறது என்று தோன்றும்.

என்னுடைய குத்தம்பாக்கம் கிராமத்தில் ஓயாமல் சண்டையாக இருக்கிறது, சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் சண்டைப்போட்டுக்கொள்வார்கள். இதற்கு தீர்வு கண்டிருக்கலாமே என்ற தேடுதல் இருந்துகொண்டே இருந்தது. நான் பார்த்த பெட்ரோலியம் வேலைகள் எல்லாம் ஆபத்தான வேலைகள், அதிகபட்ச நேரம் அதற்காக சென்றுவிடுகிறது, ஆனால் கிராமத்திற்காக வேலை செய்யவேண்டும் என்றால் அதிக நேரம் தேவைப்படுகிறது. எனவே அந்த மாதிரியான பொறுப்பான வேலையை விட்டுவிட்டு வேறு ஏதாவது சுலபமான வேலையைத் தேடினால், ஊர் மக்களுக்கு வேலை செய்யலாம் என்று CSIRல் விஞ்ஞானியாக பணிபுரிந்தேன். ஒன்பது ஆண்டுகள் இதில் வேலை செய்து வந்தேன். இவ்வேலையில் ஒரு பக்கம் ஆய்வு செய்தாலும் சிறிது நேரம் கிடைக்கும். அதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குத்தம்பாக்கம் கிராமத்தில் மக்களைப் பார்த்து பயிற்சி நடத்துவது, சின்னச்சின்ன சமுதாயப் பிரச்சனைகளுக்கு இளைஞர்களை ஒன்று திரட்டி அந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் முடிவு காண்பது என்று பல வேலைகள் நடந்துகொண்டிருந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 2 March 2016

யாருடைய குரல் சிறந்த குரல்?(சிறுகதை)


yaarudaya kural fi
வானம் மேகமூட்டமாய் இருந்தது, மழைவரும் போலிருந்தது. இக்காட்சி கண்ட கானகமயில் ஒன்று மிக்கமகிழ்ச்சி கொண்டது. அது மொட்டைப்பாறை ஒன்றின்மீது ஏறிநின்று தோகைகளைவிரித்து ஆட ஆரம்பித்தது. அதீதஉற்சாகத்தில் அது அகவவும் செய்தது. அருகே இருந்த மரத்தில் குயில்ஒன்று இருந்தது. அது மயிலின் அகவலைக் கேட்டு கீழிறங்கி வந்தது.
“நீ தோகைவிரித்தாடுவதைப் பார்ப்பது கொள்ளைஅழகுதான்! ஆனால் அகவல் மட்டும் வேண்டாம்! இனியகுரலுக்குத்தான்நான் இருக்கிறேனே?”- என்ற அது ‘அக்காவ்…அக்காவ்…’ என ராகமிட்டுப்பாடிக் காட்டியது.

கிளிஒன்று வானில் பறந்துசென்றது. அது இவைகளின் உரையாடலைக் கேட்டு கீழிறங்கி வந்தது. அது குயிலிடம் “நீ பாடுவது இனிமைதான்! ஆனால் குறுகிய காலஅளவில் அடுத்தடுத்து கூவுவதைக் கேட்க ஒரே இரைச்சலா இருக்கு! ஆனால் நான் கொஞ்சும்கிளி! மனிதர்கள் தங்கள் மழலைகளை ‘தத்தைமொழி பேசும்கிள்ளை’- என எங்கள் குரலோடு ஒப்பிட்டுத்தான் பேசுகிறார்கள்!”- என்றது. அதோடு ‘கீ…கீ…’ என்று பாடியும் காட்டியது. பாறைஇடுக்கை மாடப்பொந்தாய் மாற்றி வசித்துவந்த புறாஒன்று அங்கு வந்துசேர்ந்தது. அது “மனிதர்கள் என்னை சமாதானத்தூதுவன் என்கிறார்கள்! உலகில் சமாதானமே மிகச்சிறந்த விடயம்! ஒரு உயர்ந்த நிலையில் என்னை வைத்துப்பார்ப்பதால் நான் அடக்கமாகக் குணுகுகிறேன்!”- என்றது. புறா சொன்னதைக் கேட்ட அங்கிருந்த மற்ற பறவைகள் மூன்றும் நமட்டுச்சிரிப்பு சிரித்தன. கேவலமான குணுகலுக்கு இப்படி ஒரு விளக்கம் வேறா என்று அவைகள் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 1 March 2016

பொன்விலங்கில் பூட்டப்பட்ட மதுரை


madurai1
மதுரை சார்ந்த எழுத்தாளர்களுள் நா.பார்த்தசாரதி குறிக்கத்தக்கவர் ஆவார். இவர் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி என்றாலும் அவர் வாழ்ந்த ஊர் மதுரை ஆகும். மதுரையில் வாழ்ந்த பிறகு அவர் சென்னைக்குச் செல்கிறார். அங்குப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை படிக்கிறார். இதன்பிறக ஆய்வுப்படிப்பினை அவர் தொடர்கிறார்..
இதழாசிரியராக, சமுதாய மற்றும் வரலாற்று நாவலாசிரியராக, விளங்கும் இவர் படைப்புகளில் பொன்விலங்கு என்பது மதுரையை மையமிட்ட நாவலாகும். இதில் இடம்பெறும் சத்தியமூர்த்தி சத்தியத்திற்குத் தலைவணங்கும் கதைப்பாத்திரமாவான். இவனின் மனம் கவர்ந்த மோகினி என்ற நாட்டியப்பெண் கலைகளின் அரசி என்றாலும் அவளின் வாழ்க்கை கவலைகளால் நிரம்பியது ஆகும். இவர்கள் இருவரின் நாகரீகமான ஈர்ப்பின் இடையில் நிற்பவள் பாரதி என்னும் வசதிமிகுந்த சத்தியமூர்த்திக்கு வேலை வாய்ப்பளித்த கல்லூரி நிறுவனரின் மகள் ஆவாள். இந்த முக்கோணக் காதல் கதையில் எவர் காதலும் நிறைவேறாமல் போவது பொன்விலங்கின் சோகம் ஆகும்.
பொன்விலங்கு என்ற இந்தக்கதையின் தலைப்பே பொற்றாமரை என்ற மதுரையின் தொன்மம் சார்ந்து நா.பார்த்தசாரதியால் வைக்கப்பெற்றுள்ளது. மோகினி என்ற கதைப் பாத்திரம் நடனம் ஆடும் குலம் சார்ந்த பெண் ஆவாள். அவளின் வாழ்க்கையைச் சித்திரிக்கும்போது மதுரையில் கலைஞர்களின் நிலையைப் பற்றி நா.பார்த்தசாரதி விளக்க முனைகிறார். பணஆளுமை, அதிகார ஆளுமை ஆகியவற்றிற்கு கலைஞர்கள் அடிபணிந்து போகவேண்டிய நிர்பந்தம் இருந்ததை இந்நாவல் எடுத்துரைக்கிறது.

மதுரை நகர வீதிகளில் சத்தியமூர்த்தியும் மோகினியும் நடக்கும்போது மதுரைப் பகுதிகள் நா. பார்த்தசாரதியால் வாசகர் கண்முன் நிறுத்தப்படுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.