கேள்வி: உங்களைப் பற்றி கூறுங்கள்?
பதில்: என் பெயர்
இளங்கோ, இரசாயனப் பொறியாளர். குத்தம்பாக்கம் என்னுடைய சொந்தஊர், இதுதான்
நான் பிறந்து வளர்ந்த ஊர். இந்த கிராமத்தில நான்தான் முதல் பொறியாளரானேன்.
இந்த குத்தம்பாக்கம் கிராமம் சென்னைக்கு மிக அருகாமையில் இருந்தாலும்
பின்தங்கிய கிராமம்தான். மக்கள் ஏழையாக இருந்தார்கள், மதப் பிரச்சனைகள்
நிறைய இருந்தது, கள்ளச்சாராயம் காய்ச்சும் பழக்கம் இருந்ததால் குடிகாரர்கள்
நிறைய இருந்தார்கள், அதன்காரணமாக வன்முறை நிறைய இருந்தது. நான் இளைஞராக
வளரும்பொழுதே இதற்கு ஒரு மாற்று கண்டுபிடிக்க முடியுமா? என்ற
சூழ்நிலையில்தான் படித்தேன். வழக்கம்போல் படித்துமுடித்தவுடன் கல்வி
வெளியில் அனுப்பிவிடும், இரசாயனப் பொறியாளருக்கு வேலை இங்கு கிடைக்காது,
வெளியில்தான் வேலை கிடைத்தது. எனவே வெளியில் சென்று பணம் சம்பாதித்துவிட்டு
ஊருக்கு வரும்பொழுதெல்லாம் ஒரு குறை தெரியும். நான் மட்டும் ஏதோ
முன்னேறுவதுபோல் தெரிகிறது, நம்முடைய ஊர் அப்படியேதான் இருக்கிறது என்று
தோன்றும்.
என்னுடைய குத்தம்பாக்கம் கிராமத்தில்
ஓயாமல் சண்டையாக இருக்கிறது, சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம்
சண்டைப்போட்டுக்கொள்வார்கள். இதற்கு தீர்வு கண்டிருக்கலாமே என்ற தேடுதல்
இருந்துகொண்டே இருந்தது. நான் பார்த்த பெட்ரோலியம் வேலைகள் எல்லாம் ஆபத்தான
வேலைகள், அதிகபட்ச நேரம் அதற்காக சென்றுவிடுகிறது, ஆனால் கிராமத்திற்காக
வேலை செய்யவேண்டும் என்றால் அதிக நேரம் தேவைப்படுகிறது. எனவே அந்த
மாதிரியான பொறுப்பான வேலையை விட்டுவிட்டு வேறு ஏதாவது சுலபமான வேலையைத்
தேடினால், ஊர் மக்களுக்கு வேலை செய்யலாம் என்று CSIRல் விஞ்ஞானியாக
பணிபுரிந்தேன். ஒன்பது ஆண்டுகள் இதில் வேலை செய்து வந்தேன். இவ்வேலையில்
ஒரு பக்கம் ஆய்வு செய்தாலும் சிறிது நேரம் கிடைக்கும். அதனால் சனி மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் குத்தம்பாக்கம் கிராமத்தில் மக்களைப் பார்த்து
பயிற்சி நடத்துவது, சின்னச்சின்ன சமுதாயப் பிரச்சனைகளுக்கு இளைஞர்களை ஒன்று
திரட்டி அந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் முடிவு காண்பது என்று பல வேலைகள்
நடந்துகொண்டிருந்தது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment