வானம்
மேகமூட்டமாய் இருந்தது, மழைவரும் போலிருந்தது. இக்காட்சி கண்ட கானகமயில்
ஒன்று மிக்கமகிழ்ச்சி கொண்டது. அது மொட்டைப்பாறை ஒன்றின்மீது ஏறிநின்று
தோகைகளைவிரித்து ஆட ஆரம்பித்தது. அதீதஉற்சாகத்தில் அது அகவவும் செய்தது.
அருகே இருந்த மரத்தில் குயில்ஒன்று இருந்தது. அது மயிலின் அகவலைக் கேட்டு
கீழிறங்கி வந்தது.
“நீ தோகைவிரித்தாடுவதைப் பார்ப்பது
கொள்ளைஅழகுதான்! ஆனால் அகவல் மட்டும் வேண்டாம்! இனியகுரலுக்குத்தான்நான்
இருக்கிறேனே?”- என்ற அது ‘அக்காவ்…அக்காவ்…’ என ராகமிட்டுப்பாடிக்
காட்டியது.
கிளிஒன்று வானில் பறந்துசென்றது. அது
இவைகளின் உரையாடலைக் கேட்டு கீழிறங்கி வந்தது. அது குயிலிடம் “நீ பாடுவது
இனிமைதான்! ஆனால் குறுகிய காலஅளவில் அடுத்தடுத்து கூவுவதைக் கேட்க ஒரே
இரைச்சலா இருக்கு! ஆனால் நான் கொஞ்சும்கிளி! மனிதர்கள் தங்கள் மழலைகளை
‘தத்தைமொழி பேசும்கிள்ளை’- என எங்கள் குரலோடு ஒப்பிட்டுத்தான்
பேசுகிறார்கள்!”- என்றது. அதோடு ‘கீ…கீ…’ என்று பாடியும் காட்டியது.
பாறைஇடுக்கை மாடப்பொந்தாய் மாற்றி வசித்துவந்த புறாஒன்று அங்கு
வந்துசேர்ந்தது. அது “மனிதர்கள் என்னை சமாதானத்தூதுவன் என்கிறார்கள்!
உலகில் சமாதானமே மிகச்சிறந்த விடயம்! ஒரு உயர்ந்த நிலையில் என்னை
வைத்துப்பார்ப்பதால் நான் அடக்கமாகக் குணுகுகிறேன்!”- என்றது. புறா
சொன்னதைக் கேட்ட அங்கிருந்த மற்ற பறவைகள் மூன்றும் நமட்டுச்சிரிப்பு
சிரித்தன. கேவலமான குணுகலுக்கு இப்படி ஒரு விளக்கம் வேறா என்று அவைகள்
ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment