1947ல்
சுதந்திரம் அடைந்த அன்று இந்தியாவில் 1ரூபாய் 17 பைசா சேர்ந்தது 1 டாலர்.
1948ல் 1ரூபாய் 13பைசா சேர்ந்தது 1 பவுண்டு. அன்றைக்கு இந்த நாட்டினுடைய
பொருளாதாரம் யார் கையிலிருந்தது, விவசாயி கையிலிருந்தது. விவசாயம்தான்
நாட்டைக் காப்பாற்றிக்கொண்டிருந்தது. 60 வருடத்தில் 66 கொடுத்து 1 டாலர்
வாங்குகிறேன். நீ என்னுடைய பொருளாதாரத்தையே வீழ்ச்சி செய்துவிட்டாய்,
என்னையையும் கேவலமாக்கி கைகட்டி நிற்க வைக்கிறாய். நான் பருத்தி விளைய
வைக்கிறேன், நான் ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும், என்னுடைய பருத்தி இல்லை
என்றால் துணி போட முடியாது, என்னுடைய தக்காளி இல்லை என்றால் சென்னையில்
வாழ முடியாது. என்னுடைய கத்தரிக்காய் இல்லையென்றால் டெல்லியில் வாழ
முடியாது.
திட்டமிட்டு
விவசாயிகளையும், கிராமத்து மக்களையும் உங்களுடைய பக்கம் இழுத்து நம்ப
வைத்துவிட்டாய். என்னுடைய நம்பிக்கையை நான் இழந்துவிட்டு பயிர்
செய்துவிட்டேன், என் வீட்டில் சோறு இருக்கிறது, பால் இருக்கிறது, பழம்
இருக்கிறது, எல்லாமே இருக்கிறது. நான் மிகவும் கூனிக் குறுகி மிகவும்
நொந்துபோன தாழ்வானவனாக நான் நினைத்து வாழ்கிறேன். உன்னிடம் ஒன்றும்
கிடையாது, தமிழைக்கூட மாற்றிப் பேச கற்றுக்கொண்டாய். ஆனால் நீ நினைக்கிறாய்
அங்கு உட்கார்ந்துகொண்டு கால்மேல் காலைப்போட்டு விவசாயிகள் பாவம் என்று
நினைக்கிறாய். இங்கு எங்களுடைய தேங்காய் இல்லை என்றால் நீ வாழ முடியாது.
அந்தத் தேங்காயைக் கொண்டுவந்து முட்டாள்கள் தெருவில் உடைக்கிறோம்.
இவையனைத்தையும் எப்படி மாற்றுவது. இது பெரிய வேலை ஒன்றும் கிடையாது,
ராக்கெட் விடுவதோடு ஒப்பிடும்பொழுது மிகச் சிறிய வேலை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment