Tuesday 1 March 2016

பொன்விலங்கில் பூட்டப்பட்ட மதுரை


madurai1
மதுரை சார்ந்த எழுத்தாளர்களுள் நா.பார்த்தசாரதி குறிக்கத்தக்கவர் ஆவார். இவர் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி என்றாலும் அவர் வாழ்ந்த ஊர் மதுரை ஆகும். மதுரையில் வாழ்ந்த பிறகு அவர் சென்னைக்குச் செல்கிறார். அங்குப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை படிக்கிறார். இதன்பிறக ஆய்வுப்படிப்பினை அவர் தொடர்கிறார்..
இதழாசிரியராக, சமுதாய மற்றும் வரலாற்று நாவலாசிரியராக, விளங்கும் இவர் படைப்புகளில் பொன்விலங்கு என்பது மதுரையை மையமிட்ட நாவலாகும். இதில் இடம்பெறும் சத்தியமூர்த்தி சத்தியத்திற்குத் தலைவணங்கும் கதைப்பாத்திரமாவான். இவனின் மனம் கவர்ந்த மோகினி என்ற நாட்டியப்பெண் கலைகளின் அரசி என்றாலும் அவளின் வாழ்க்கை கவலைகளால் நிரம்பியது ஆகும். இவர்கள் இருவரின் நாகரீகமான ஈர்ப்பின் இடையில் நிற்பவள் பாரதி என்னும் வசதிமிகுந்த சத்தியமூர்த்திக்கு வேலை வாய்ப்பளித்த கல்லூரி நிறுவனரின் மகள் ஆவாள். இந்த முக்கோணக் காதல் கதையில் எவர் காதலும் நிறைவேறாமல் போவது பொன்விலங்கின் சோகம் ஆகும்.
பொன்விலங்கு என்ற இந்தக்கதையின் தலைப்பே பொற்றாமரை என்ற மதுரையின் தொன்மம் சார்ந்து நா.பார்த்தசாரதியால் வைக்கப்பெற்றுள்ளது. மோகினி என்ற கதைப் பாத்திரம் நடனம் ஆடும் குலம் சார்ந்த பெண் ஆவாள். அவளின் வாழ்க்கையைச் சித்திரிக்கும்போது மதுரையில் கலைஞர்களின் நிலையைப் பற்றி நா.பார்த்தசாரதி விளக்க முனைகிறார். பணஆளுமை, அதிகார ஆளுமை ஆகியவற்றிற்கு கலைஞர்கள் அடிபணிந்து போகவேண்டிய நிர்பந்தம் இருந்ததை இந்நாவல் எடுத்துரைக்கிறது.

மதுரை நகர வீதிகளில் சத்தியமூர்த்தியும் மோகினியும் நடக்கும்போது மதுரைப் பகுதிகள் நா. பார்த்தசாரதியால் வாசகர் கண்முன் நிறுத்தப்படுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment