Tuesday, 12 April 2016

சிறந்த உணவுமுறை எது?


diet1
பொன்னகை அணிந்த மாளிகைகள்
புன்னகை மறந்த மண்குடிசை
பசி வர அங்கே மாத்திரைகள்
பட்டினியால் இங்கு யாத்திரைகள்
என்று இருவேறுபட்ட உணவு உண்ணும் நிலைமை உலகில் உள்ளதைக் கவிஞர் கண்ணதாசன் சுட்டிக் காட்டியிருப்பார்.

ஆனால், மற்றொரு மாறுபட்ட கோணமும் நம்மிடம் உண்டு. நன்கு வகைவகையாக சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று சமையற்குறிப்புகளைத் தேடி அலைவது ஒரு பக்கம் என்றால், சாப்பிட்ட உணவு உடற்பருமனையும், அதன் மூலம் பிற வகையில் உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கக் கூடாது என்ற நோக்கில், ஆரோக்கியமான உணவுமுறை எது என்றும் மறுபக்கம் நாமே தேடிக் கொண்டிருப்போம். உணவு பற்றிய கட்டுரை என்பதால் “You can’t eat your cake, and have it too” என்ற ஆங்கிலப் பழமொழியையோ, “கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை” என்ற தமிழ்ப்பழமொழியையோ நினைவு கூரலாம். “The irony of life” என்று இது ஆங்கிலத்தில் சொல்லப்படுவது போல எதிரெதிர் பலன்களையும் அடைய விரும்பும் மனநிலை நம்மிடம் இருப்பதுதான் நடைமுறை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 11 April 2016

நீரிழிவு நோய் மருத்துவர் V.வேணுகோபால் அவர்களின் நேர்காணல்: இறுதிப் பகுதி

கேள்வி: சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன?
Dr.Venugopal24
பதில்: அதிக நாட்களுக்கு அறிகுறியே இல்லாமல் இருக்கும். சிலர் ஆயுள்காப்பீடு எடுக்கச்செல்வார்கள், மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வார்கள் அந்த நேரத்தில் முதலில் இருப்பது தெரியும். ஒருவருக்கு சிறிய விபத்து நடந்திருக்கும், நேற்று வரையிலும் சர்க்கரை நன்றாகத்தான் இருந்தது மருத்துவ பரிசோதனையில் ஆனால் இன்றைக்கு இருசக்கர வாகனத்தில் ஒரு சிறிய விபத்து நடந்திருக்கும். அதன் காரணமாக இரத்தப்பரிசோதனை செய்தால் சர்க்கரை ஏறியிருக்கும். எனவே திடீரென்று ஏற்பட்டிருக்கும் அலட்சிகள்.
90 பேருக்கு அறிகுறிகள் இல்லாமலே இருந்து, சர்க்கரை ஒரு அளவிற்கு மேல் போகும்பொழுது அவர்களுக்கு முதன் முதலில் அதிக தாகம், நா வறட்சியினால் தாகம், நிறைய நீர் செல்வது போன்ற அறிகுறிகள் உருவாகும். இதனை Polyurea, Polydipsiya என்பார்கள். சிலருக்கு சாப்பிட்டாலும் பசி அடங்காது, மறுபடியும் மறுபடியும் சாப்பிடவேண்டும் என்கிற சூழ்நிலை இருக்கும். இது ஆரம்பநிலை. சிலருக்கு காலில் மதமதப்பு, எரிச்சலோடு உள்ள வலி, கால் குத்தல், சோர்வு, எவ்வளவு சாப்பிட்டாலும் சோர்வு இருக்கும் அடித்துப்போட்டமாதிரி, அப்படியே தூங்கலாமா என்று தோன்றும்.

மற்றொன்று ஆண்களுக்கு பிறப்புறுப்பு முனையில் இருக்கிற தோலில் சிறிய சிறிய புண்கள், அழுக்கு சேருகிறது போல் சேர்ந்து நமச்சல் இருக்கும். நிறையபேர் இதனை பாலியல் நோயா என்றுகூட சந்தேகப்பட்டுவிடுவார்கள். அப்படியெல்லாம் இல்லை, இது ஆண்களுக்கு ஏற்படுகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 7 April 2016

மகிழ்ச்சிக்கான இரகசியங்கள்!

magizhchiyaana1
1.”எதற்கு அவசியமே இல்லையோ அதை நினைத்து எப்பொழுதும் கவலைப்படாதீர்கள்”.
2.”ஏதாவது மனம் பொருந்தாத நிகழ்வு நடந்தாலோ, தவறான நிகழ்வொன்று நேர்ந்தாலோ  இது தவறான நிகழ்வுதானே அன்றி தவறான வாழ்க்கை கிடையாது என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.”
3.”உங்களுக்குத் தெரிந்தவரையில் இருப்பது இந்த ஒரே வாழ்க்கை மட்டும் தான். உங்களுக்குப் பிடித்தது போல பிறருக்கு இடையூறின்றி இரசித்து வாழுங்கள்.”
4.”மனமுடையும் பொழுதுகளில் தனியே அழுதுவிடுங்கள்! அது மனச்சுமையையும் குறைக்கும், கண்களில் உள்ள தூசுகளையும் வெளியேற்றும்.
5.”பிறரிடம் பேசும் பொழுதுகளில் நல்லெண்ணத்தை அதிகம் விதையுங்கள், அவரோடு சேர்ந்து உங்கள் எண்ணமும் வளர்ச்சி அடையும்.”

இவை எல்லாம் தெரிந்தும்  கவலைப்படும் மனதை என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக்கூறுகிறீர்களா?,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 6 April 2016

பொருளாதார விளையாடல்கள்

porulaadhaara vilayaadalgal1
உலகை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக பொருளதாரத் துறையின் கைக்கு சென்று கொண்டிருக்கும் காலம் இது. மிக சமீபத்திய எதிர்காலத்தில் அதிகாரம் முற்றிலும் பொருளாதாரத்துறையைச் சார்ந்தே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எவ்வாறு அடையப்பட்டிருந்தாலும், அது எப்போதுமே பொருளாதாரத்தை சார்ந்தே இருந்திருக்கிறது. ஆனால் மெல்ல மெல்ல அதன் தொடக்கமும், செயலியக்கமும், முடிவும் பொருளாதாரத்தைச் சார்ந்தே இருக்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனில் அதன் விளைவுகள் மனித சமூகத்திற்கு முற்றிலும் சாதகமாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
porulaadhaara-vilayaadalgal9
பொருளாதாரத்தின் மறுபெயர் நுகர்வு. பூமியில் இருக்கும் இயற்கை வளங்களை மனித சமூகம் உபயோகப்படுத்தி, அதைக் கழிவாக மீண்டும் பூமிக்கு அளிப்பது நுகர்வு. உலகத்தில் உள்ள அனைத்து உயிருள்ளவையும் உயிரற்றவையும், தொடர்ந்து மற்றொன்றை நுகர்ந்து தானும் மாறி நுகர்ந்தவற்றையும் பிறிதொன்றாக மாற்றி வேறொன்றின் நுகர்வுக்குத் திரும்ப அளித்துக் கொண்டே இருக்கின்றன. இது ஒரு இடைவிடாத இயக்கம். மனிதர்கள் இன்று உருவாக்கும் பெரும்பான்மையான கழிவுகள் பிற உயிரினங்களால் நுகரமுடியாதவையாக உள்ளதால் பூமி மனிதக் கழிவுகளின் குப்பைக்கூடமாக மாறிவருகிறது. மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களுக்கெல்லாம் உணவே அவற்றின் நுகர்வின் பெரும் பகுதி. உயிரில்லாதவை பிற உயிரினங்களாலோ இயற்கையின் விசைகளாலோ நுகரப்படுகிறது. நுகரப்படுவதன் எதிர் விளைவாக அவை நுகரவும் செய்கின்றன. இந்தத் தொடர் இயக்கங்களின் மூலமே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 5 April 2016

சங்க காலத் தமிழரின் விளையாட்டுக்கள்


tamilargalin-vilayaattu9
மனித இனத்தில் விளையாட்டும் விளையாட்டுக்கள் எப்பொழுதும் முக்கிய இடங்களை வகித்துவருகின்றன. அவற்றைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் அநேக இடங்களில் பரவியுள்ளன. சங்ககால விளையாட்டுக்கள் வாழ்வில் பெரும்பாலும் விளையாட்டை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல் அவர்களது வீரத்தை பறைசாற்றுபவையாக இருந்துள்ளன. அவைகள் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு இப்பகுதியில் காணலாம். மேலும் பெண்கள் விளையாட்டுக்கள் எப்படிப்பட்டவையாக இருந்துள்ளன என்பதையும் இப்பகுதியில் காணலாம்.
  1. புனலாடுதல்:

பெண்கள் பலர் சூழ்ந்து நிற்க ஆடவர்கள் தங்கள் வீரத்தை காட்டும் விதமாக நீர்த்துறை அருகே தாழ்ந்த கிளைகளையுடைய மருத மரத்தினின்று ஆழமிக்க கிணற்றுக்குள் பாய்ந்து மூழ்கி அக்கிணற்றின் அடியில் இருக்கும் மணலை எடுத்து அங்கு சூழ்ந்திருந்த பெண்களிடம் தம் வீரத்தைக் காட்டும் விதமாக அம்மணலை நுகர்ந்து காட்டியதாக புறநானூறு பாடலின் வாயிலாகவே நமக்கு ஆதாரம் கிடைக்கிறது. அவற்றின் தன்மையைப் பற்றியும் அழகுற விளக்குகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 4 April 2016

வெப்ப அலைகள்(Heat Waves)


veppa alaigal1
மே மாதம் வரப்போகிறது. கோடையின் தாக்கமும் வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த வருடம் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் சேர்த்து வெயிலின் காய்ச்சலுக்கு, ஐ.நா-வின் அறிக்கைப்படி 2248 பேர் இறந்தனர். பின்னர் அதைப்பற்றி அரசும் மறந்துவிட்டது, நாமும் மறந்துவிட்டோம். ஆனால் வருமுன் சிந்திப்பதே சாலச்சிறந்தது என்பதால், வெயிலின் பாதிப்பை முன் கூட்டியே கணித்து பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, நம்மை நாமே தயாராக்கிக் கொள்வோம்.
பொதுவாகவே பேரிடர் பாதிப்புகளில், நாம் நிலநடுக்க பாதிப்புகளையும், சுனாமி, வெள்ளம், புயல் போன்றவற்றின் பாதிப்புகளை மட்டுமே நாம் கவனத்தில் கொள்கிறோம். வெப்ப அலைகள்(Heat waves) என்பதனை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இதுபெரும் தவறு என்பதனை அதிகரித்துக் கொண்டிருக்கும் புவி வெப்பநிலை, நமக்கு எச்சரிக்கிறது. வெப்ப அலைகள் என்றால் சுற்றுப்புறம், காற்று ஆகியவற்றில் வெப்பத்தை ஏற்படுத்துவது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 3 April 2016

நீரிழிவு நோய் மருத்துவர் V.வேணுகோபால் அவர்களின் நேர்காணல்


Dr.Venugopal1
கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில்: நான் பேராசிரியர் மருத்துவர் வேணுகோபால். பிறந்தது திருவண்ணாமலை அருகில் இருக்கும் போளூர் என்ற ஒரு சிறிய நகரம். அவ்விடத்திலே பத்தாம் வகுப்புவரை முடித்துவிட்டு, லயோலா கல்லூரியில் P.U.C. முடித்து, அதற்குப் பிறகு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் M.B.B.S மற்றும் M.D இரண்டையும் முடித்தேன். அதன் பிறகு உதவி பேராசிரியராகவும், பேராசிரியராகவும் அரசுக் கல்லூரிகளில் பணிபுரிந்தேன். ஸ்டான்லியில் இருபது வருடத்திற்கு மேலும், சென்னை மருத்துவக் கல்லூரியில் இரண்டாண்டும், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இரண்டாண்டும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஒன்றரை ஆண்டும் என்னுடைய பணி இருந்தது.
அதற்குப் பிறகு வெளிநாட்டில் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் மாநகரில் மூன்றாண்டுகளுக்கும் மேலும், அமெரிக்காவில் மேயோ கிளினிக்கிலும் என்னுடைய பணி முடிந்ததற்குப் பிறகு, மறுபடியும் தமிழகத்திற்குத் திரும்பிவந்து பெருந்துறை மருத்துவக்கல்லூரியில் மருத்துவத்துறை பேராசிரியராகவும், அதற்குப் பிறகு முதல்வராகவும் இருந்து பணி ஓய்வு பெற்றபிறகு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் முதுகலைப்பட்டப்படிப்பு இயக்குனராக இருந்து பதினைந்து நாட்களுக்கு முன் ஓய்வுபெற்று, இப்பொழுது சர்க்கரைநோய் துறை என்பதால் அதிலே சிறப்புப் பயிற்சிகள் பெற்றிருப்பதால் அதை இப்பொழுது எடுத்துக்கொண்டு இப்பொழுது அதன் ஆலோசகராக சிறப்புத் துறை மருத்துவராகப் பணியாற்ற இருக்கின்றேன்.
கேள்வி: சர்க்கரை நோய் என்றால் என்ன?

Diabetic patient doing glucose level blood test
பதில்: என்னுடைய கருத்துப்படி இதற்கு தவறான பெயர் கொடுத்துவிட்டார்கள் என்று நினைக்கின்றேன். சர்க்கரை நோய் என்று சொல்வதற்குப் பதிலாக, சர்க்கரை அதிகமான மாற்றம் ஏற்படுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தெரிந்துகொள்வது மிக அவசியம். நாம் உண்ணும் உணவில் மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, புரதச் சத்து என்ற மூன்று முக்கியமானது. மாவுச்சத்தில் முக்கியமானது என்னவென்றால், செரித்த பிறகு கடைசியாக மாறுவது குளுக்கோஸ் அல்லது சர்க்கரை. குளுக்கோஸ் என்பது ஒரு வகையான சர்க்கரை. இதனுடைய பணி என்னவென்றால், இதுதான் நம் உடம்பிற்கு சக்தி(Energy) கொடுக்கக்கூடியது. எப்படி காருக்கோ அல்லது மற்ற வாகனங்களுக்கோ பெட்ரோல் எரிபொருள் சக்தி கொடுக்கிறதோ, அதுபோல் இது ஒரு எரிபொருள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.