மே
மாதம் வரப்போகிறது. கோடையின் தாக்கமும் வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே
போகிறது. கடந்த வருடம் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் சேர்த்து வெயிலின்
காய்ச்சலுக்கு, ஐ.நா-வின் அறிக்கைப்படி 2248 பேர் இறந்தனர். பின்னர்
அதைப்பற்றி அரசும் மறந்துவிட்டது, நாமும் மறந்துவிட்டோம். ஆனால் வருமுன்
சிந்திப்பதே சாலச்சிறந்தது என்பதால், வெயிலின் பாதிப்பை முன் கூட்டியே
கணித்து பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, நம்மை நாமே
தயாராக்கிக் கொள்வோம்.
பொதுவாகவே பேரிடர் பாதிப்புகளில், நாம்
நிலநடுக்க பாதிப்புகளையும், சுனாமி, வெள்ளம், புயல் போன்றவற்றின்
பாதிப்புகளை மட்டுமே நாம் கவனத்தில் கொள்கிறோம். வெப்ப அலைகள்(Heat waves)
என்பதனை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இதுபெரும் தவறு என்பதனை
அதிகரித்துக் கொண்டிருக்கும் புவி வெப்பநிலை, நமக்கு எச்சரிக்கிறது. வெப்ப
அலைகள் என்றால் சுற்றுப்புறம், காற்று ஆகியவற்றில் வெப்பத்தை
ஏற்படுத்துவது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment