உலகை
ஆட்டிப்படைக்கும் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக பொருளதாரத் துறையின் கைக்கு
சென்று கொண்டிருக்கும் காலம் இது. மிக சமீபத்திய எதிர்காலத்தில் அதிகாரம்
முற்றிலும் பொருளாதாரத்துறையைச் சார்ந்தே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
எவ்வாறு அடையப்பட்டிருந்தாலும், அது எப்போதுமே பொருளாதாரத்தை சார்ந்தே
இருந்திருக்கிறது. ஆனால் மெல்ல மெல்ல அதன் தொடக்கமும், செயலியக்கமும்,
முடிவும் பொருளாதாரத்தைச் சார்ந்தே இருக்கும் நிலையை நோக்கி சென்று
கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனில் அதன் விளைவுகள் மனித சமூகத்திற்கு
முற்றிலும் சாதகமாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
பொருளாதாரத்தின்
மறுபெயர் நுகர்வு. பூமியில் இருக்கும் இயற்கை வளங்களை மனித சமூகம்
உபயோகப்படுத்தி, அதைக் கழிவாக மீண்டும் பூமிக்கு அளிப்பது நுகர்வு.
உலகத்தில் உள்ள அனைத்து உயிருள்ளவையும் உயிரற்றவையும், தொடர்ந்து மற்றொன்றை
நுகர்ந்து தானும் மாறி நுகர்ந்தவற்றையும் பிறிதொன்றாக மாற்றி வேறொன்றின்
நுகர்வுக்குத் திரும்ப அளித்துக் கொண்டே இருக்கின்றன. இது ஒரு இடைவிடாத
இயக்கம். மனிதர்கள் இன்று உருவாக்கும் பெரும்பான்மையான கழிவுகள் பிற
உயிரினங்களால் நுகரமுடியாதவையாக உள்ளதால் பூமி மனிதக் கழிவுகளின்
குப்பைக்கூடமாக மாறிவருகிறது. மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களுக்கெல்லாம்
உணவே அவற்றின் நுகர்வின் பெரும் பகுதி. உயிரில்லாதவை பிற உயிரினங்களாலோ
இயற்கையின் விசைகளாலோ நுகரப்படுகிறது. நுகரப்படுவதன் எதிர் விளைவாக அவை
நுகரவும் செய்கின்றன. இந்தத் தொடர் இயக்கங்களின் மூலமே உலகம் இயங்கிக்
கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment