பொன்னகை அணிந்த மாளிகைகள்
புன்னகை மறந்த மண்குடிசை
பசி வர அங்கே மாத்திரைகள்
பட்டினியால் இங்கு யாத்திரைகள்
என்று இருவேறுபட்ட உணவு உண்ணும் நிலைமை உலகில் உள்ளதைக் கவிஞர் கண்ணதாசன் சுட்டிக் காட்டியிருப்பார்.
ஆனால், மற்றொரு மாறுபட்ட கோணமும் நம்மிடம்
உண்டு. நன்கு வகைவகையாக சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று
சமையற்குறிப்புகளைத் தேடி அலைவது ஒரு பக்கம் என்றால், சாப்பிட்ட உணவு
உடற்பருமனையும், அதன் மூலம் பிற வகையில் உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கக்
கூடாது என்ற நோக்கில், ஆரோக்கியமான உணவுமுறை எது என்றும் மறுபக்கம் நாமே
தேடிக் கொண்டிருப்போம். உணவு பற்றிய கட்டுரை என்பதால் “You can’t eat your
cake, and have it too” என்ற ஆங்கிலப் பழமொழியையோ, “கூழுக்கும் ஆசை
மீசைக்கும் ஆசை” என்ற தமிழ்ப்பழமொழியையோ நினைவு கூரலாம். “The irony of
life” என்று இது ஆங்கிலத்தில் சொல்லப்படுவது போல எதிரெதிர் பலன்களையும்
அடைய விரும்பும் மனநிலை நம்மிடம் இருப்பதுதான் நடைமுறை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment