Monday, 11 July 2016

மன்னியுங்கள் அப்பா, மன்னியுங்கள் அம்மா


Siragu mannichchidunga article4

அன்புள்ள அம்மா, அப்பாவுக்கு

இதுவரை உங்களுக்கு நான் கடிதம் எழுதியதில்லை, எழுத நினைத்ததும் இல்லை. ஆனால் இன்று எழுதுகிறேன். ஒருவேளை இனிமேல் உங்களுக்கு கடிதம் எழுத முடியாமல் போகலாம். இதுவே என் கடைசி கடிதமாகவும் ஆகலாம். எனவே எழுதுகிறேன்.

சென்ற வாரம் ஆனந்திற்கும் ஆனந்திக்கும் திருமணம். அவர்கள் பெயர்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை போல, அவர்களின் உள்ளங்களும் ஒன்றுபற்றிருந்தது. எனவே நானும், துளசியும், சில நண்பர்களும் சேர்ந்து திருமணத்தை முன்நின்று நடத்தி வைத்தோம்.


ஆனந்த், ஆனந்தியின் மனங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டதுபோல், அவர்களின் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. காவல்நிலையம் போனார்கள், சட்டம் மணமக்களுக்கு ஆதரவாக இருந்தது. கெஞ்சிப் பார்த்தார்கள், தற்கொலை மிரட்டல் விடுத்தார்கள், கொலை மிரட்டலும் விடுத்தார்கள் பயனில்லை. கடைசியாக சாபமும் விட்டார்கள். அந்த சாபம் எனக்கும் சேர்த்துதான். பெற்றோர்களிடம் இருந்து அவர்களின் பிள்ளைகளை நான் பிரித்துவிட்டேன் என்றும், எனவே இதுபோல் திருமணம் நானும் செய்து உங்களை அவமானப்படுத்துவேன் என்பதுதான் அவர்களின் சாபம் அல்லது ஆசை அல்லது பழிதீர்த்தல்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 10 July 2016

அடையாளம் தொலைக்கும் நாஞ்சில் நாடு!….


siragu Naanjil nadu1

திருவிதாங்கூர் அரசின் நெற்களஞ்சியமாக இருந்த நாஞ்சில் நாடு இன்று தன் அடையாளத்தை இழந்து நிற்கின்றது. குமரி மாவட்டம் இப்படி ஆகி விட்டதே என கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கின்றார்கள் இயற்கை காவலர்கள். நெல் விவசாயத்தில் கொடி கட்டி பறந்த நாஞ்சில் நாட்டில் இப்போது நெல் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருகின்றது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு அறுவடை காலத்திலும் சில விவசாயிகளுக்கு அது தான் கடைசி சாகுபடியாக இருப்பது தான் வேதனைக்குரிய ஒன்று. நாகர்கோவிலில் இருந்து வடமதியை(அழகியபாண்டியபுரம்) நோக்கி பயணிப்பதே சுகமான கவிதை தான். நகரின் எல்லைப் பகுதியில் இருக்கும் சி.பி.ஹச் மருத்துவமனையை கடந்ததும் சமுத்திரமாக விரிகின்றது புத்தேரி பெரிய குளம். அதனைத் தொடர்ந்து வடமதி முழுவதும் வரிசை கட்டி நின்று செழுமை சேர்த்துக் கொண்டிருக்கின்றது நெல் வயல்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 8 July 2016

மனித ஆயுளை நீள வைக்கும் பழங்கள்


Siragu fruits1

மாம்பழம்
மாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம். வைட்டமின் ‘ஏ’ குறைவால் பார்வைக்கோளாறு, மலைக்கண் நோய் ஏற்படும். இப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ 2743 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் ‘பி’, ‘சி’ மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருட்களும் உள்ளன.

ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சுப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ‘ஏ’ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 6 July 2016

காதல் பாதை சரியானதா?


Siragu-kaadhal-paadhai1

முன்பெல்லாம் ஒரு சிலரிடம் மட்டுமே காதல் கலாச்சாரம் ஏற்பட்டது. இப்போதோ அது ஒரு கெளரவப் பிரச்சினையாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் காதல் வலையில் விழ நேர்ந்தது ஒரு வெட்கத்திற்குரிய விசயமாகக் கருதப்பட்டது. இப்போதோ பள்ளிக்கூட நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் காதல் அனுபவத்திற்குச் செல்லாமலிருப்பது ஒரு குறைவு போலவும், வெட்கத்திற்குரியது போலவும் எண்ணப்படுகிறது.


பெரும்பாலும் காதல் என்பது எதிர்பாலின ஈர்ப்பு விசையின் விளைவாகவே ஏற்படுகிறது. தொடர்ந்து பேசக்கிடைக்கும் வாய்ப்புகள், பழகக்கிடைக்கும் சந்தர்ப்பங்கள், ஒருவரையொருவர் நெருங்க வைக்கும் சூழ்நிலைகள், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு உணர்வு ரீதியான ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. பெரும்பாலும் எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒருவரிடமுள்ள ஏதாவது ஒரு விசயம் மிகவும் பிடித்து விடுவதால் காதல் தோன்ற ஆரம்பித்து விடுகிறது. அந்த ஒரு விசயம் அழகு, இனிமையான வார்த்தைகள், கவரும் தன்மையுள்ள ஒரு நடவடிக்கை, கரிசனையான செயல், வேடிக்கையாகப் பேசும் திறன், அக்கறையான விசாரிப்பு, தனித்திறமை, இப்படி ஏதாவது ஒன்றாக இருக்க முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 5 July 2016

ஒப்பிடாதீர்கள் ! ஒத்துக்கொள்ளுங்கள் !


Siragu oththukkol2

ஒப்பிடுவது என்பது நம்மில் வளர்ந்துள்ள களை எடுக்கப்பட வேண்டிய குணம். நமது ஒட்டு மொத்த நிம்மதியை குத்தகைக்கு எடுத்து அணு அணுவாய் நம்மை சித்திரவதைகள் செய்யக்கூடியது இந்த ஒப்பிடுவது. “அவன் வண்டி(மகிழுந்து) வாங்கிட்டான்! நானும் வாங்கனும்”, “அவன் இரு சக்கரவண்டி வாங்கியிருக்கான், அதுக்காகவே நானும் வாங்கனும்” இப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்த ஒப்பிடுதல். ஒப்பிடுதல் என்பது எவ்வளவு கீழ்த்தரமானது என்றால் நமது சுயமதிப்பை வெகுவாக நமக்குள்ளே கீழே தள்ளிவிடும். “நேத்து இந்நேரம் வேலைக்குச் சேர்ந்தான் வீடு வாங்கிட்டான்” என்பதால் வீட்டை மட்டும் தான் நீங்கள் ஒப்பிடுகிறீர்கள், அவர் அதற்கான எடுத்த சிரமத்தை அல்ல. உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஆப்பிரிக்கா கண்டத்தில் நுறு கோடி பேர் தான் வாழ்கின்றனர், ஆனால் நம் இந்திய நாட்டில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர், பாருங்கள் எவ்வளவு வித்தியாசம் என்று. ஒப்பிட்டு ஒப்பிட்டு, பார்த்துப் பார்த்து அதை அடைய முடியாமல் போகும் பொழுது நமது மதிப்பை நாமே நொந்து கொள்வோம். அப்படி இல்லை என்றால் நமது பெற்றோரையோ, நாம் வேலைக்குச் சேர்ந்த நிறுவனங்களையோ நொந்து கொள்வதும் உண்டு.

ஒருவரை உங்களுடன் ஒப்பிடுவது ஆரோக்கியமான முறையில் இருக்கும் பட்சத்தில் அங்கு நன்மை மட்டும் கிடைக்கும். உதாரணத்திற்கு, “அவன் வண்டி வாங்கியிருக்கான், ஆனால் இந்தக் வண்டி வாங்க அவன் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும்! அவனைப் போலவே நானும் உழைச்சுக் கஷ்டப்பட்டு அதை ஒரு நாள் வாங்குவேன்” என்று நீங்கள் எண்ணும் பொழுதுகள் உங்களுக்குள் இருக்கும் ஒப்பிடும் தன்மை உங்களை ஒரு நல்ல பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் நாம் தான் அதைச் செய்வதில்லையே!, கடனை வாங்கியாவது அந்தக் வண்டி நம் வீட்டின் முன் நிற்க வேண்டும் என்று அதை வாங்கி வைத்துவிட்டு கடனும் கட்டி, வண்டியையும் விற்கும் நிலைமைக்கெல்லாம் சிலர் தள்ளப்படும் தவிர்க்க இயலாத சூழலை நாம் கண்டும் கேட்டும் இருப்போம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 4 July 2016

கவனத்தை ஈர்க்கும் ஒரு சொல்


Siragu gavaththai eerkkum sol3

சொற்களைக் கோர்த்து சொற்றொடராக்குவது ஒரு கலை. பேசி முடிக்கும் வரை கேட்போர் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் தக்க வைத்துக்கொள்வது ஒரு தனிக் கலை. பேச்சாற்றலால் சிலர் இதை சாதிக்கும்போது விருப்பத்தின் அடிப்படையில் / அனிச்சையாகச் சிலர் இதை சாத்தியமாக்குகிறார்கள்.

உரையாற்றும்போது அவையில் உள்ளோர் சிந்திக்கத் தேவையான சமயத்தைக் கொடுப்பதற்காக ஒரு சொல்லை சொல்லி நிறுத்துவதற்கு ஆங்கிலத்தில் filler என்று பெயர். இந்த filler வார்த்தைகளைத் தேவையான இடத்தில் சரியான சமயத்தில் பயன்படுத்துவது மற்றவர்களை சிந்திக்க வைக்கும், ஆவலைத் தூண்டும். அதே வார்த்தைகளைத் தேவைக்கதிகமாகவும், அநாவசியமான இடங்களிலும் உபயோகிப்பது சலிப்பைத் தரும்.

கவிதையில் ஒரு சொல் மீண்டும் மீண்டும் சொல்லப்படும்போது அதன் இனிமை கூடும், அழகு கூடும், சொல்ல நினைக்கும் கருப்பொருளை வலியுறுத்த இந்த உத்தி உதவும்.


entrance exam3

மாணவர்களுக்குத் தெளிவாகப் புரிய வைக்கும்படி பாடம் நடத்தும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. ஒவ்வொரு வாக்கியத்தின் துவக்கத்திலோ, முடிவிலோ ஒரு வார்த்தையை மீண்டும் மீண்டும் ஆசிரியர் சொல்லும்போது மாணவர்களின் கவனம் பாடத்தில் இல்லாமல் அவ்வார்த்தையைப் பின் தொடர்வதில் செல்லும். அவர் எத்தனை முறை ஒரு வார்த்தையைச் சொன்னார் என்று கணக்கெடுக்கத் துவங்குவர். தன் தோழன் / தோழியிடம் தான் ஊகிக்கும் சமயத்தில் சரியாக ஆசிரியர் ஒரு வார்த்தையைச் சொல்வார் என்று பந்தயம் கட்டி விளையாடுவது சுவாரசியமான பொழுதுபோக்காக மாறிவிடும்.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

கணவனால் நாள்பட்ட மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்கள்- அவர்களின் தண்டனைகள் பற்றிய ஒரு அலசல் !!


Siragu kanavanaal1

கணவன் தன் மனைவி மீது  தொடர்ந்து  வன்முறை தாக்குதல்கள் நடத்திக் கொண்டே இருக்கின்ற போது, அது மன ரீதியாகவும் இருக்கலாம் அல்லது உடல் ரீதியாகவும் இருக்கலாம்; இந்தத் தொடர் தாக்குதலால் அந்தப்  பெண் ஒரு  விதமான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றார் என்கின்றது ஆய்வுகள். இதனை ஆங்கிலத்தில் Battered Woman Syndrome என்று அழைக்கின்றார்கள். இதைப் பற்றி முதலில் 1970 -இல் டாக்டர். லெனோரே வால்கெர் (Dr. Lenore Walker) என்ற உளவியல் நிபுணர் தான் கோட்பாடாக, இந்த  சமூகத்தில் ஒரு பெண் மன மற்றும் சமூக ரீதியாக தொடர்ச்சியாக வன்முறைக்கு ஆளாகும் போது எப்படி பாதிப்புக்கு உள்ளாகிறார் என்று “The Battered Woman” என்ற நூலில் கூறினார்.

தொடர்ந்து தாக்குதலுக்கு தன் கணவனால் உள்ளாகும் பெண் ஒரு வன்முறை சுழற்சிக்கு ஆளாகி மன ரீதியாக பாதிப்படைகின்றாள். அப்படி பாதிக்கப்படும் பெண் அந்தக் குடும்ப வன்முறையில் இருந்து தப்பிக்க தன் கணவனை கொலை செய்கின்றாள். Dr . Walker தெளிவாகக் கூறுகின்றார் இது ஒரு நோய் அல்ல தொடர்ந்து  கணவனால் துன்பப்படுத்தப்படும் பெண் பல்வேறு சமூகக் காரணங்களால் அந்த உறவில் இருந்து வெளியேற முடியாமல் கணவனைக் கொன்றுவிடுகின்றாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.