அன்புள்ள அம்மா, அப்பாவுக்கு
இதுவரை உங்களுக்கு நான் கடிதம்
எழுதியதில்லை, எழுத நினைத்ததும் இல்லை. ஆனால் இன்று எழுதுகிறேன். ஒருவேளை
இனிமேல் உங்களுக்கு கடிதம் எழுத முடியாமல் போகலாம். இதுவே என் கடைசி
கடிதமாகவும் ஆகலாம். எனவே எழுதுகிறேன்.
சென்ற வாரம் ஆனந்திற்கும் ஆனந்திக்கும்
திருமணம். அவர்கள் பெயர்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை போல, அவர்களின்
உள்ளங்களும் ஒன்றுபற்றிருந்தது. எனவே நானும், துளசியும், சில நண்பர்களும்
சேர்ந்து திருமணத்தை முன்நின்று நடத்தி வைத்தோம்.
ஆனந்த், ஆனந்தியின் மனங்கள் ஒருவரை ஒருவர்
ஏற்றுக் கொண்டதுபோல், அவர்களின் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
காவல்நிலையம் போனார்கள், சட்டம் மணமக்களுக்கு ஆதரவாக இருந்தது. கெஞ்சிப்
பார்த்தார்கள், தற்கொலை மிரட்டல் விடுத்தார்கள், கொலை மிரட்டலும்
விடுத்தார்கள் பயனில்லை. கடைசியாக சாபமும் விட்டார்கள். அந்த சாபம்
எனக்கும் சேர்த்துதான். பெற்றோர்களிடம் இருந்து அவர்களின் பிள்ளைகளை நான்
பிரித்துவிட்டேன் என்றும், எனவே இதுபோல் திருமணம் நானும் செய்து உங்களை
அவமானப்படுத்துவேன் என்பதுதான் அவர்களின் சாபம் அல்லது ஆசை அல்லது
பழிதீர்த்தல்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment