திருவிதாங்கூர் அரசின் நெற்களஞ்சியமாக
இருந்த நாஞ்சில் நாடு இன்று தன் அடையாளத்தை இழந்து நிற்கின்றது. குமரி
மாவட்டம் இப்படி ஆகி விட்டதே என கன்னத்தில் கை வைத்து
உட்கார்ந்திருக்கின்றார்கள் இயற்கை காவலர்கள். நெல் விவசாயத்தில் கொடி
கட்டி பறந்த நாஞ்சில் நாட்டில் இப்போது நெல் சாகுபடி பரப்பு வெகுவாக
குறைந்து வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு அறுவடை
காலத்திலும் சில விவசாயிகளுக்கு அது தான் கடைசி சாகுபடியாக இருப்பது தான்
வேதனைக்குரிய ஒன்று. நாகர்கோவிலில் இருந்து வடமதியை(அழகியபாண்டியபுரம்)
நோக்கி பயணிப்பதே சுகமான கவிதை தான். நகரின் எல்லைப் பகுதியில் இருக்கும்
சி.பி.ஹச் மருத்துவமனையை கடந்ததும் சமுத்திரமாக விரிகின்றது புத்தேரி பெரிய
குளம். அதனைத் தொடர்ந்து வடமதி முழுவதும் வரிசை கட்டி நின்று செழுமை
சேர்த்துக் கொண்டிருக்கின்றது நெல் வயல்கள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment