ஒப்பிடுவது
என்பது நம்மில் வளர்ந்துள்ள களை எடுக்கப்பட வேண்டிய குணம். நமது ஒட்டு
மொத்த நிம்மதியை குத்தகைக்கு எடுத்து அணு அணுவாய் நம்மை சித்திரவதைகள்
செய்யக்கூடியது இந்த ஒப்பிடுவது. “அவன் வண்டி(மகிழுந்து) வாங்கிட்டான்!
நானும் வாங்கனும்”, “அவன் இரு சக்கரவண்டி வாங்கியிருக்கான், அதுக்காகவே
நானும் வாங்கனும்” இப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்த ஒப்பிடுதல். ஒப்பிடுதல்
என்பது எவ்வளவு கீழ்த்தரமானது என்றால் நமது சுயமதிப்பை வெகுவாக நமக்குள்ளே
கீழே தள்ளிவிடும். “நேத்து இந்நேரம் வேலைக்குச் சேர்ந்தான் வீடு
வாங்கிட்டான்” என்பதால் வீட்டை மட்டும் தான் நீங்கள் ஒப்பிடுகிறீர்கள்,
அவர் அதற்கான எடுத்த சிரமத்தை அல்ல. உங்களுக்கு ஒன்று தெரியுமா?
ஆப்பிரிக்கா கண்டத்தில் நுறு கோடி பேர் தான் வாழ்கின்றனர், ஆனால் நம்
இந்திய நாட்டில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர், பாருங்கள்
எவ்வளவு வித்தியாசம் என்று. ஒப்பிட்டு ஒப்பிட்டு, பார்த்துப் பார்த்து அதை
அடைய முடியாமல் போகும் பொழுது நமது மதிப்பை நாமே நொந்து கொள்வோம். அப்படி
இல்லை என்றால் நமது பெற்றோரையோ, நாம் வேலைக்குச் சேர்ந்த நிறுவனங்களையோ
நொந்து கொள்வதும் உண்டு.
ஒருவரை உங்களுடன் ஒப்பிடுவது ஆரோக்கியமான
முறையில் இருக்கும் பட்சத்தில் அங்கு நன்மை மட்டும் கிடைக்கும்.
உதாரணத்திற்கு, “அவன் வண்டி வாங்கியிருக்கான், ஆனால் இந்தக் வண்டி வாங்க
அவன் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும்! அவனைப் போலவே நானும்
உழைச்சுக் கஷ்டப்பட்டு அதை ஒரு நாள் வாங்குவேன்” என்று நீங்கள் எண்ணும்
பொழுதுகள் உங்களுக்குள் இருக்கும் ஒப்பிடும் தன்மை உங்களை ஒரு நல்ல
பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் நாம் தான்
அதைச் செய்வதில்லையே!, கடனை வாங்கியாவது அந்தக் வண்டி நம் வீட்டின் முன்
நிற்க வேண்டும் என்று அதை வாங்கி வைத்துவிட்டு கடனும் கட்டி, வண்டியையும்
விற்கும் நிலைமைக்கெல்லாம் சிலர் தள்ளப்படும் தவிர்க்க இயலாத சூழலை நாம்
கண்டும் கேட்டும் இருப்போம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment